பக்கம்:மதன கல்யாணி-3.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 255 தாலும் உன்னை மதனகோபாலன் விட்டுவிடுவான் என்று நினைக்காதே? கண்மணி வெட்கப்படாதே! வா இப்படி, உனக்கு மாமியாராகப் போகும் இந்த அம்மாளுடைய காலைத் தொட்டு நமஸ்காரம் பண்ணு" என்று மிகுந்த வாஞ்சையாகவும் மனப்பூர்வ மான பிரியத்தோடும் கூற, உடனே கண்மணியம்மாள் தலை குனிந்து மடவன்னமென நடந்து வந்து கல்யாணியம்மாளுக்கு முன்னால் பணிவாகக் குனிந்து, அந்தச் சீமாட்டியினது பாதங்களைத் தொட்டுத் தனது கண்ணிற் ஒற்றிக் கொண்டவளாய் எழுந்திருக்க, உடனே கல்யாணியம்மாள் மிகுந்த பிரியத்தோடு அவளை இழுத்து ஆசையாக மார்போடணைத்து முத்தமிட்டு, "குழந்தாய்! உன்னுடைய மனோபீஷ்டம் நிறைவேறுங் காலம் வந்துவிட்டதனாலேதான், மதனகோபாலனுடைய ரகசியமெல்லாம் இப்போது வெளியானதென்றே நான் நினைக்கிறேன். உத்தம ஜாதி ஸ்திரீகளுடைய மனசில் ஈசுவரன் எப்போதும் சான்னித்யமாக இருந்து அவர்களை எப்போதும் சரியான வழியில் நடத்திக் கொண்டு போவான் என்பது நம்முடைய சாஸ்திரக் கொள்கை. அது போலவே உனக்கு நேர்ந்திருப்பதால் நீ நல்ல பதிவிரதா சிரோன்மணி என்பதற்கு வேறே எவ்வித ருஜூவும் தேவையில்லை. நீ உன் மனசைக் கொள்ளைக் கொண்ட மணாளனை அடைந்து என்றும் தீர்க்க சுமங்கலியாக இருந்து வாழப் போகிறாய்" என்று கூறி அவளை விடுத்தாள். அதன்பிறகு, கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், அங்கே கூடியிருந்த கல்யாணியம்மாள் மீனாகூஜியம்மாள் முதலிய உறவினர் யாவரும் நாலைந்து நாட்கள் வரையில் அந்த மனோகர விலாசத்திலேயே சந்தோஷமாக இருந்துவிட்டு போக வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, யாவரும் முழுமனதோடு அதற்கு இணங்கினர். அன்றைய இரவிலும் எல்லோருக்கும் பெருத்த விருந்து நடைபெற்றது. ஆனால் அங்கிருந்த எல்லோரது மனமும் பிரம்மானந்தமே நிறையப் பெற்றிருந்தமையால், சகிக்க இயலாத மனவெழுச்சியும் உற்சாகமும் அடைந்திருந்த யாவரும் அன்றைய தினம் ஊணையாகிலும் உறக்கத்தையாகிலும் நாடாமல் புதிதாக ஏற்பட்ட உறவினரோடு ஒருவருக்கொருவர் சம்பாஷித்துக் கொஞ்சிக் குலாவிக் குதூகலமாக இருந்தனர். அன்றைய தினம் இரவு கழிய மறுநாட் காலை வந்தது. கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் 10.85.IIl-17