பக்கம்:மதன கல்யாணி-3.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


266 மதன கல்யாணி போய்விட்டது. இனிமேல், நாம் அதை எப்படி மறைத்துக் காரியத்தை முடிக்க வேண்டுமோ, அப்படிச் செய்தே தீரவேண்டும். எனக்கு ஒரு யோசனை தோன்று கிறது. அந்த மாதிரி செய்தால் எல்லாம் ஒழுங்காகிவிடும் என நினைக்கிறேன்" என்று பணிவாகவும் உருக்கமாகவும் கூறினாள். அவளது சொற்களைக் கேட்டு ஒருவாறு இரக்கங் கொண்ட கல்யாணியம்மாள், "என்ன யோசனை அது? சொல் பார்ப்போம்" என்றாள். கோமளவல்லியம் மாள், "இப்போது மோகனரங்கனுக்கும், துரைஸானியம்மாளுக்கும் ரகசியத்தில் கலியாணமாகி இருந்தாலும், அதை எவரும் அறியாராகையால், அவள் மோகனரங்கனுடைய பெண்ஜாதி என்று நாம் வெளிப்படையாகச் சொன்னால், கலியாணம் எப்போது நடந்ததென்ற கேள்வி பிறக்கும். ஆகையால், நாம் வெளிப்படையாக அவளுக்கும் மோகனரங்கனுக்கும் இன்னொரு தரம் கலியாணம் பண்ணியே தீரவேண்டும்; ராமலிங்கபுரத்தாரும் நம்மைப் பற்றி இழிவாகப் பேசாமலிருக்கும்படியாக நாம் முன்னே செய்தது போல இன்னொரு தந்திரமும் செய்ய வேண்டும்" என்றாள். கல்யாணியம்மாள் மிகுந்த சந்தோஷமடைந்து, "ஆம், மெய்தான்; துரைஸானிக்கு இன்னொரு தரம் வெளிப்படையாகக் கலியாணம் செய்ய வேண்டும் என்பது நல்ல யோசனைதான். மோகனரங்கனுக்குப் பெண்டாட்டியான அவளை இனி நாம் ராமலிங்கபுரத்தாருக்குக் கட்டிக் கொடுக்கலாம் என்று யோசனை சொல்லப் போகிறாயா?" என்று பதற்றமாகக் கேட்க, கோமள வல்லியம்மாள் புன்னகை செய்து, "இல்லையம்மா! நான் அப்படிப் பட்ட கெட்டகாரியத்தை மனசாலும் நினைப்பேனா! அதெல்லாம் ஒன்றுமில்லை. துரைஸானியம்மாள் மோகனரங்கனையே கட்டிக் கொள்ளட்டும்; என்னை நீங்கள் அன்றைய தினம் துரைஸானி யம்மாள் ஆக்கினர்கள் அல்லவா; அதை எப்போதும் நிரந்தர மாகவே செய்து விடுங்கள். நான் தான் மூத்தவளான துரைஸானி யம்மாள் என்றும், அவள் இளையவளான கோமளவல்லி என்றும் சொல்லி விடுவோம்; நம்முடைய குடும்ப விஷயங்கள் எல்லாம் நம்முடைய வேலைக்காரர்கள் எல்லோருக்கும் தெரிந்து போய் விட்டன. ஆகையால், அவர்களுக்கும் இந்த மாறுதலைச் சொல்லி