பக்கம்:மதன கல்யாணி-3.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 மதன கல்யாணி போச்சுங்க. இதுவரையிலெ நான் அந்தக் கல்லியாணி அம்மாளுக் காவ தாச்சனெ பாத்தேன்; இனிமேலே அதுகூடப் பாக்கப் போறதில்லெ; இதுனாலே அந்த அம்மாளுக்குத் தெண்டனை ஆவுமுன்து நீங்க சொன்னத்தெயும் நானு கேட்டுக்கினுதான் இருந்தேன்; அப்பிடி ஆனாலும் ஆயிட்டுப் போவுது எனக்கு அதெப்பத்திக் கவலெ இல்லீங்க; ஏனுன்னா அவுங்க ஒங்ககிட்டக் கூட என்னமோ கெடுதலா நடந்திருக்காவ இன்னு சொன்னிங்கள்ள, என்னோடெ உசிரெ நீங்க காப்பாத்தினிங்கள்ள; அதுக்கு நான் ஏதாச்சும் வதிலு ஒதவி செய்யனும். அதுக்காவ, அந்த அம்மாளுக்கு அந்த தெண்டனெ கெடைக்கட்டும். நான் நேத்து சாயிங்காலமே எம்மவங்கிட்டச் சொல்லிப்புட்டேன் என்னன்னா, நாம் மாத்ரம் உசிரோடெ இருந்தா, இன்னம் ஏலுநாள்ளெ அவனோடெ ஜெமீந்தாருப் பட்டத்தெப் புடுங்கிப்புட்டு அவனுக்கு அடப்பப் பையெக் குடுக்கிறேனுங்க. அதெ நான் ஒடனே போயி நெறவேத்தணும். அவன் அம்பட்டப்பையன் இங்கற சேதி அந்த அம்மாளுக்கும், இன்னொரு பொம்புள்ளெக் கும், எனக்குந்தான் தெரியும்; ஆனா, கல்யாணி அம்மாளோடெ நெசப்புள்ளெயெ இன்னான் திருடினான், இன்னானுக்கு வித்தான் இங்கற சங்கதி எனக்கு ஒருத்திக்குத்தான் தெரியும்; மத்தவங்களுக்குத் தெரியாது. கல்லியாணி அம்மாளோடெ நெசப்புள்ளே சாவக்கீவ இல்லெ; அநேகமா அது உசிரோடெதான் இருக்கணும். நான் இப்ப போயி அந்தப்புள்ளேயெ வாங்கின மனிசன் எங்ங்னே இருக்கறானுன்னு கண்டுபுடிச்சு அந்தப் புள்ளெயெக் கொண்டாறேன். அப்பாலே பாருங்களேன் இந்த அம்பட்டக் கருப்பாயி செய்யற காரியத்தே" என்று மிகவும் ஆத்திரமாகப் பேசிய கருப்பாயி மறுபடியும் மயங்கி அப்படியே படுக்கையில் சாய்ந்து விட்டாள். அவள் தனது உடம்பு செளக்கியம் அடைந்து விட்டதாகச் சிறிது நேரத்திற்கு முன் சொன்னாள் ஆனாலும், அவள் உண்மையில் மிகவும் கேவலமான ஸ்திதியிலேயே இருந்தாள். மைனரது விஷயத்தில் தான் செய்த சபதத்தை நிறைவேற்றி வைக்கப் போக வேண்டும் என்ற ஆவலினாலும் ஆத்திரத்தினாலும், அவள் அவ்வாறு கூறினாள். ஆனால், அவள் தனது மனவெழுச்சியைத் தாங்கமாட்டாமல் மறுபடியும் படுக்கையில் சாய்ந்து விட்டாள்.