பக்கம்:மதன கல்யாணி-3.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 மதன கல்யாணி என்றாள். அதுகாறும் கண்களை மூடிக் கொண்டு, சாகப் போகிறவள் போலக் கிடந்த கோமளவல்லியம்மாள், ராமலிங்க புரத்திலிருந்து மனிதர் வந்திருக்கிறார்கள் என்ற சங்கதியைக் கேட்ட உடனே திடுக்கிட்டுத் தனது கண்களைத் திறந்து புருவத்தை உயர்த்தி விகாரப் பார்வையாக நாற்புறங்களிலும் தனது விழியைச் சுழற்றினாள்; தனக்கருகில் நின்று கொண்டிருந்த இளைய ஜெமீந் தாரிணியைப் பார்த்தவுடனே புன்முறுவல் செய்து அவர்களது வருகையைப் பற்றி சந்தோஷப்படுகிறவள் போலக் காட்டிக் கொண்டு ஒருவிதக் கிலேசமுற்றவளாய் எழுந்திருக்க முயன்றாள். அதைக் கண்ட கல்யாணியம்மாள் மிகுந்த வாஞ்சையோடு அவளைத் தடவிக் கொடுத்து, "படுத்திரு எழுந்திருக்க வேண்டாம்; இவர்கள் வித்தியாசமாக எண்ண மாட்டார்கள். நாம் கடிதம் எழுதினோம் அல்லவா? அதற்காக, லக்கினப் பத்திரிகை வாங்கிக் கொண்டு போக வந்திருக்கிறார்கள். பத்திரிகையை எழுதிக் கொடுக்கலாமா? இவர்கள் வீட்டுக் குழந்தையைக் கட்டிக் கொள்ள உனக்குச் சம்மதந்தானா? உன் மனசில் உள்ளதை மறைக்காமல் வெளியிடு" என்றாள். அதைக் கேட்ட கோமளவல்லியம்மாள் மிகுந்த நாணமடைந்த வளாகக் காணப்பட்டாள் ஆனாலும், மகிழ்ச்சியும் புன்னகையும் தோன்றிய முகத்தினளாய், "நீங்கள் எல்லோரும் பார்த்து என்னை எங்கே கட்டிக் கொடுத்தாலும் அதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டியவள். உங்களுடைய இஷ்டம் போலச் செய்யலாம். இதைப்பற்றி என்னைக் கேட்கவும் வேண்டுமா! எனக்கு அவ்வளவு சுதந்தரமும் அதிகாரமும் வந்துவிட்டனவா!' என்று கூறிய வண்ணம் அயர்ந்து மயங்கிக் கண்களை மூடிக் கொண்ட வண்ணம் தனது கைகள் இரண்டையும் நீட்டித் தனது தாயை மிகுந்த வாத்சல்யத்தோடு கட்டி அணைத்த வண்ணம் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். உடனே கல்யாணியம்மாள் தனது புதல்வியினது முகத்தை அன்போடு தடவிக் கொடுத்து அதைத் தலையணையில் நன்றாக வைத்துப் போர்த்திய பின் பொன்னம்மாளைப் பார்த்து, "சரி; குழந்தையை அதிகமாக அலட்டக் கூடாது. நீ ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டிரு. டாக்டருக்கு ஆள் அனுப்புகிறேன். இவர்கள்