பக்கம்:மதன கல்யாணி-3.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 மதன கல்யாணி சற்று முன் பங்களாவிற்குள் யாரோ ஒரு பெண்பிள்ளை வந்து வீணை வித்துவானைப் பற்றி விசாரித்ததாக வேலைக்காரன் மதன கோபாலனிடத்தில் சொல்ல, அவன் தானே எழுந்து விரைவாக வெளியிலே ஓடிவந்தான். ஆனால், அவன் கல்யாணியம்மாள வந்தாளென்று கனவிலும் நினைக்காதவன் ஆகையால், வண்டிக்குள் உட்கார்ந்திருந்த கல்யாணியம்மாள் அவனைக் கண்டு அன்பாகப் புன்னகை செய்ததைக் கணடவுடனே அவன் திடுககிட்டுத் திகைப்பும் அச்சமும் அடைந்தவனாய் ஸ்தம்பித்துச் சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டான். அந்தச் சீமாட்டியம்மாள் தனனிடத்தில் கரைகடந்த பிரேமையும் அபிமானமும் வைத்தவள் என்பதை அவன் நன்றாக உணர்ந்தவன் ஆகையால், அவள் அந்தரங்கத்தில் செய்த தவறை வெளியிட்டு, அவளுக்கு நோட்டீஸ் அனுப்பி, தான் மிகவும் கொடுமையாக நடந்து கொண்டதைப் பற்றி மிகுந்த கிலேசமும், இன்னதென்று விவரிக்க முடியாத சஞ்சலமும் அடைந்தவனாகத் தனது சிரத்தைக் கீழே கவிழ்த்துக் கொண்டான். அவனது முகம் சந்தோஷத்தினால் மலராமல் வெட்கத்தினால் விகாரப்பட்டது. அவன் மகா தயாள குணமும், ஜீவகாருண்யமும் உடையவன் ஆகையால், தன்னால் ஒரு ஸ்திரீ யினது மனம் புண்படலாயிற்றே என்ற இரக்கமும், சங்கடமும எழுந்து அவனை வதைத்தன. அவன் அவ்வாறு தத்தளித்து நின்றதைக் கண்ட கல்யாணியம்மாள் பொன்னம்மாளினது முகத்தைப் பார்க்க, அவள், "அம்மணி நீங்க பேசறத்துக்குள்ளற நானும் வண்டிக்காரனும் அலெ ஒரமாப் போயிப் பாத்துப்புட்டு வாறோம்" என்று கூறிய வண்ணம் வண்டிக்காரனை அழைத்துக் கொண்டு சுமார் 50-கஜத்திற்கப்பால் இருந்த மணற்பரப்பிற்குப் போய்விட்டாள். உடனே கல்யாணியம்மாள் மதனகோபாலனை நோக்கிப் புன்னகை செய்து, "அப்பா மதனகோபாலா, சாட்சிக்காரனுடைய காலில் விழுவதைவிட, சண்டைக்காரனுடைய காலில் விழுவது நல்லதென்று ஜனங்கள் சொல்லுவார்கள். அதுபோல நானும் வந்திருக்கிறேன், நான் என்ன குற்றம் செய்திருந்தாலும் மன்னித்துக் கொள்ளப்பா!" என்று மனப்பூர்வமாகவும் உருக்கமாகவும் கூறினாள்.