உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மதமும் மூடநம்பிக்கையும்


வதற்கும், வைதீகப்–பயனற்ற கூட்டத்தைக் காப்பாற்றுவதற்கும் வீணே செலவழிக்கப்பட்டன. நான் முன்பு கூறியதுபோல, கிருத்துவத்தின் இந்த இருண்ட காலங்களில் ஏதொன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை; ஏதொன்றும் ஆராய்ந்து செய்யப்படவில்லை; மனித வாழ்வு உயர்வதற்கான ஏதொரு திட்டமும் தீட்டப்படவில்லை. இயற்கையை மீறிய ஆற்றலிடமிருந்து, உதவியைப் பெறவேண்டி, கிருத்தவ உலகின் உழைப்பாற்றல்களெல்லாம் வீணாக்கப்பட்டன.

பல நூற்றாண்டுகள் வரையிலும், கிருத்தவர்கள், கிருத்துவின் வெறும் கல்லறையை மீட்பதற்காக மகம்மதுவைப் பின்பற்றினவர்களோடு போரிடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர், இந்தக் கவைக்குதவாத கடவுள் பீடத்தின்மீது கோடிக்கணக்கான மக்களின் உயிர்கள் பலியிடப்பட்டன! அப்படியிருந்தும் எதிரியின் படைவீரர்களே வெற்றி பெற்றனர்; கிருத்துவின் கொடியை ஏந்திச் சென்றவர்கள். புயற்காற்றின்முன் இலைகளைப் போல, சிதறுண்டு போனார்கள்.

அந்த இருண்ட காலங்களில், ஒரேயொரு கண்டுபிடிப்பு நடந்தேறியதாகயதாக நான் நினைக்கிறேன். அதுதான் வெடி மருந்துக் கண்டுபிடிப்பு கி பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோஜர் பேக்கன் என்ற மடாலய பாதிரியார் ஒருவர் வெடிமருந்தைக் கண்டுபிடித்தார்; ஆனாலும் ஆண்டவனுடைய ஆசியில்லாமலேயேதான் கண்டுபிடித்தார். என்றாலும், இந்தப் பெருமை நாம் கிருத்தவ மதத்திற்குக் கொடுப்பதற்கில்லை; ஏனென்றால், ரோஜர் பேக்கன், மத எதிரி என்று சொல்லி ஒதுக்கப்பட்டவர்; இம்மாதிரியான பகுத்தறிவுதான் நிலைக்களனாக நின்று வேலை செய்திருக்க வேண்டும் என்று மதவாதிகள் கருதினர். அந்த வைதீக நாட்களில், அறிவுடைய மக்களுக்கு எப்படிப்பட்ட கொடுமைகள் இழைக்கப்பட்டனவோ, அவற்றையொட்டியே ரோஜர் பேக்கனும் குற்றஞ் சாட்டப்பட்டுச் சிறையிலடைக்-