அறிவியலும் மதவியலும்
103
கப்பட்டார். மாதாகோயில் வெற்றி வீரனாக நின்றது. வாளும் கேடயமும் அதன் கையில் இருந்தன; அப்படியிருந்தும் நாணயமற்ற போக்கையும் வலிவையும் உதவியாகக் கொண்டு வெற்றி பெற்றது. அது தனக்குள்ளேயே தோல்வி என்னும் விதைகளை விதைத்துக்கொண்டது. மாதா கோயில் நடக்கமுடியாத செயல்களுக்காக முயன்று பார்த்தது. உலகத்தை ஒரே நம்பிக்கையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று அரும்பாடு பட்டது; எல்லோருடைய உள்ளங்களையும் ஒரு பொதுத் தன்மைக்கு மறப்புரட்சி மூலம் கொண்டு வருவதற்கும் மனிதனின் தனித்தன்மையை அடியோடு அழிப்பதற்கும் ஆனவரையில் பாடுபட்டது. இதனை நிறைவேற்றி வைக்க, அது, தந்திரம் சொல்லிக் கொடுத்த எல்லாவித வித்தைகளையும், முறைகளையும் கையாண்டு பார்த்தது. குற்ற உள்ளம் கண்டுபிடித்துக் கூறிய எல்லாவித முறைகளையும் அது கடைப்பிடித்துப் பார்த்தது.
ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறி யுங்கூட, சில மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அவர்கள் உலக நடவடிக்கைகளிலும், இயற்கையின் பெரிய கண்காட்சியிலும் விருப்பஞ் செலுத்தத் தலைப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வியப்புக்குரிய நிகழ்ச்சிக்குள்ள காரணங்களையும, விளக்கங்களையும் தேடத் தொடங்கினார்கள். மாதாகோயில் சரியென்று நிலைநாட்டின கொள்கைகளைக் கொண்டு அவர்கள் மன நிறைவு கொள்ளவில்லை. இந்தச் சிந்தனையாளர்கள் வானுலகை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டுத் தங்களுடைய சூழ்நிலைகளை உற்றுக் கவனிக்கத் தொடங்கினர். அவர்கள். இவ்வுலக நலத்தை விரும்பும் அளவுக்கு ஆத்மார்த்தமற்றவர்களாகவே இருந்தனர். அவர்கள், உணர்ச்சிகள் வயப்பட்டவர்களாகவும், மதச் சார்பற்றவர்களாகவும், உலக வாழ்வில் திளைத்தவர்களாகவும், பேரறிவு கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள்.