உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மதமும் மூடநம்பிக்கையும்


முடிவு என்ன? அவர்கள், புதிது கண்டுபிடிக்கவும், புதியன ஆராயவும், உண்மைகளுக்கிடையேயுள்ள தொடர்பை அறியவும், மகிழ்ச்சிக்குரிய காரணங்களைக் கண்டறியவும், தங்கள் உடன் வாழும் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான வழிகள் யாவை என்பதைக் கண்டறியவும் தலைப்பட்டார்கள்!

கோர்க்கும் அச்செழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன; மூர் வகுப்பினரிடமிருந்து காகிதம் பெற்றுக்கொள்ளப்பட்டது; புத்தகங்கள் வெளியிடப்பட்டன; ஒவ்வொரு தலைமுறையினரும் வருங்காலத் தலைமுறையினர்க்கு அறிவுச் செல்வத்தைச் சேமித்துவைத்துக் கொடுக்கக்கூடிய வகையில் ஏதுவான நிலைமை ஏற்பட்டது. சட்டுக் கதைகளும் வதந்திகளும் உலாவிவந்த இடத்தை வரலாறு பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது. தொலைநோக்கு ஆடி (தூர திருஷ்டிக் கண்ணாடி) கண்டுபிடிக்கப்பட்டது. நட்சத்திரங்களின் நிலைமையும் இருப்பிடமும் கண்டுபிடிக்கப்பட்டன; மக்கள் அண்டத்தின் குடிமக்களாக மாறினர். நீராவிப் புகைவண்டி கட்டப்பட்டது; பெரிய வேலைக்காரனாக நீராவி, கோடிக்கணக்கான மக்களின் வேலையைச் செய்து வருகிறது. நடக்க முடியாதவைகளான "கற்பனை அதிசயம் ஒதுக்கித் தள்ளப்பட்டது; பயன்படும் கலவையியல், இடத்தைப் பற்றிக்கொண்டது. வான ஜோஸ்யம் வான இயலாக மாறிற்று. மனித அறிவின் மிகப்பெரிய முயற்சிகளில் மிக முக்கியமானவையாகக் கருதப்படும் மூன்று விதிகளைக் கெப்லர் கண்டுபிடித்தார். நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து இப்பொழுது கவிதையாகவும், பாட்டாகவும் ஆகிவிட்டது. நில ஈர்ப்பின் தொடர்பான கணக்கு விதிகளை, நியூட்டன் நமக்கு அளித்தார். குருதியோட்டத்தின் அமைப்பினை ஹார்வி கண்டுபிடித்தார். அவர் அதன் உண்மையை நமக்குக் கூறினார்; டிராப்பர் அதற்கான காரணத்தை நமக்குக் கொடுத்தார். நீராவிக் கப்பல்கள் அலைகடல்களை வென்றன; புகைவண்டித் தொடர்கள் நிலத்தை நிரப்பின. வீடு-