உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மதமும் மூடநம்பிக்கையும்


மக்களாகிய குழந்தைகளைப்பற்றி அவர் கவலைப்பட்டார் என்று நாம் கூற முடியுமா? அவருடைய அருளுள்ளம் என்றும் நிலைத்து நிற்கும் தன்மையது என்று நாம் இயம்ப முடியுமா?

இந்தக் கடவுள் 'மிகவும் நல்லவர்' ஏனென்றால், அவர் பெரும் புயற்காற்றை அனுப்பி, ஊர்களையெல்லாம் பாழ் படுத்தி வயல்களிலெல்லாம் தந்தைமார்கள்—தாய்மார்கள் குழந்தைகள் ஆகியோரின் உருவழிந்த பிணங்களால் நிரப்பினார் என்று நாம் நிரூபிப்பதா? அவர் நிலத்தைப் பிளக்கச் செய்து, ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை அதனால் விழுங்கச் செய்தார் என்றோ, அல்லது அவர் எரிமலைகளைக் கொண்டு, நெருப்பு ஆறுகளை அவற்றினின்றும் பீறிட்டுக் கிளம்பச்செய்து, மக்களை மூழ்கடித்தார் என்றோ எடுத்துக்காட்டி, அவரது. 'நல்ல தன்மையை' நாம் நிரூபிப்பதா? நாம் அறிந்த இந்த உண்மைகளி லிருந்து, கடவுளின் 'நல்ல தன்மையை' நாம் ஊகித்துக் கொள்ளலாகுமா?

இந்தத் துக்கங்கள் நடைபெறாமலிருந்திருக்குமேயானால், ஆண்டவன், உலகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று, நாம் ஐயப்பாடு கொண்டிருப்போமா? பஞ்சமும் கொள்ளை நோயும், புயற்காற்றும் நில அதிர்ச்சியும் இல் லாமலிருந்திருக்குமேயானால் ஆண்டவன் நல்லவரல்லர் என்று, நாம் நினைத்திருப்போமா?

மதவாதிகளின் கருத்துப்படி, கடவுள் எல்லா மக்களையும். ஒரேமாதிரியாகப் படைக்கவில்லை என்று கொள்ள வேண்டும். அறிவில், நிலையில், நிறத்தில் வேறுபாடு கொண்ட பல இனங்களை அவர் உண்டாக்கினார் என்றால், இதில் நல்ல தன்மை இருந்ததா, நல்ல அறிவுடைமை இருந்ததா?