மூடநம்பிக்கையும் அறிவியலும்
111
ஆனால், நாம் அறிவோம், கடவுள்களும் பூதங்களும், சுவர்க்கங்களும் நரகங்களும் எப்படி உண்டாக்கப்பட்டன என்பதை. நாம் வேத நூல்களின் வரலாற்றையும் தங்களின் உற்பத்தியையும் நன்கு மூட நம்பிக்கை என்னும் விதைகள் எப்படி நடப்பட்டன என்பதையும், அவற்றை எது வளர்த்துவந்தது என்பதையும் நாம் அறிவோம். எல்லா மூட நம்பிக்கைகளும், எல்லாக் கோட்பாடுகளும், எல்லா முட்டாள் தனங்களும், எல்லாத் தவறுகளும், எல்லாக் குற்றங்களும், எல்லாக் கொடுமைகளும், எல்லா நன்மைகளும் தீமைகளும், எல்லா விருப்பங்களும், அச்சங்களும், எல்லாக் கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்பட்டன என்பதை நாம் அறிவோம் பகுத்தறிவு ஒளியின் உதவியினைக்கொண்டு, நாம், துன்புறுத்துவதினின்றும் பயன்படுவதைப் பிரிக்கிறோம்; பொய்யினின்றும் உண்மையைப் பிரிக்கிறோம்.
நாம், இறந்தகாலத்தையும், மனிதன் நடந்தேறிவந்த வழிகளையும் அறிவோம். நாம், மிகச் சொற்ப உண்மைகளையும், மிகச் சொற்ப இயற்கையின் பகுதிகளையும், அறிவோம். இந்தத் தெரிந்த உண்மைகளையும், அறிந்த பகுதிகளையும் வைத்துக்கொண்டு நாம், நமது கற்பனைத் திறனாலும் கலையுள்ளத்தாலும் இறந்த காலத்தைப் புதுப்பிக்கிறோம்; இருக்கவேண்டியவைகளை வருங்காலத்தரையில் அறிவு வண்ணங்களால் தீட்டிக்காட்டுகிறோம்.
நாம் இயற்கையிலே நம்பிக்கை செலுத்துகிறோம்; உடையாத உடையமுடையாத இயற்கைக் காரணகாரியங் களின் தொடர்பில் நம்பிக்கை செலுத்துகிறோம். இயற்கைக்கு மீறிய ஆற்றல் இருப்பதாகச் சொல்லப்படுவதை நாம் மறுக்கிறோம் நறுமணப்புகை காட்டல், மண்டியிடுதல், மணியோசை ஒலித்தல், பாட்டுப்பாடல் செபமணி உருட்டல், வழிபாட்டுரை கூறல் ஆகியவைகளால் மகிழ்ச்சியுறும் கடவுளை நாம் நம்புவதில்லை; அச்சத்தாலும், பக்தியாசை-