உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மதமும் மூடநம்பிக்கையும்


சேர்ந்தவர்கள் என்பதையும், இங்கேயே உற்பத்தி செய்யப் பட்டவர்கள் என்பதையும், எந்தக் கடவுளின் ஊதுதலிலிருந்தும் அவர்களின் வாழ்வு பிறக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம். ஏதாவது நாம் அறிந்திருக்கிறோமென்றால், இந்த அண்டம இயற்கையானது என்பதையும், ஆண்களும் - பெண்களும் இயற்கையாகவே உற்பத்தி யாக்கப்பட்டார்கள் என்பதையும் நாம் இப்பொழுது நன்கு அறிவோம். நாம் நம் முன்னோர்களை அறிவோம்; அவரது வழிவழித் தலைமுறையினரை அறிவோம்.

சங்கிலியின் எல்லாக் கரணைகளையும், புல்வகையி லிருந்து மனித வகை வரையிலுள்ள இறுபத்தாறு கரணைகளையும் நாம் அறிந்திருக்கிறோம்.

நாம் இந்தச் செய்திகளை அறிந்தது, வேத நூல்களிலிருந்தல்ல. நாம், எலும்புக்கூடுகள் கூறும் உண்மைகளிலிருந்தும், வாழும் உயிரினங்களின் வடிவங்களிலிருந்தும் அவற்றை அறிகிறோம்

மிகச்சாதாரண உணர்ச்சியற்ற அணுத்திரள்களிலிருந்து உயிரணுதோன்றி, அந்த உயிரணு நீர்க்கோத்தவொன்றாகி, அது இரண்டாகப் பிரிந்து, பிரிந்தவொன்று புழுவாகிப், பின் நீண்ட- பருத்த புழுவாகிப் பின் முதுகு எலும்புடையனவாகிப், பின் நீர்வாழ்வனவாகிப், பின் ஊர்வனவாகிப் பின் பறப்பனவாகிப், பின் நடப்பனவாகிப், பின் விலங்குகளாகிப், பின் குரங்காகிப், பின் வாலில்லாக் குரங்காகிப், பின் கொரில்லாவாகிப். பின் மந்தியாகிப், பின் மனிதனாகி வளர்ந்து வந்திருக்கும் வழி வழித் தலைமுறை வரலாற்றை நாம் அறிந்திருக்கிறோம்.

வாழ்வு நடந்துவந்த வழியை நாம் அறிகிறோம் முன்னேற்றத்தின் அடிச்சுவடுகளை நாம் அறிகிறோம். அவைகள் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வளர்ந்து