உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக்கு மீறிய ஒன்றா?

27


நிகழ்ச்சியும் அதனதன் பெற்றோர்களைக் கொண்டேயிருக்கின்றன.

நிகழாத ஒன்று இருக்க முடியாது நிகழ்காலம், இறந்த காலத்தின் காரியமும், இறந்த காலத்தின் காரணமும் ஆகும்.

எல்லையற்ற பெருஞ் சங்கிலியில் பிளவு ஏற்படவோ, கரணையொன்று காணாமற் போகவோ செய்யவில்லை; இனியும் செய்யாது. நட்சத்திரங்களின் அளவும் அமைப்பும், உலகங்களின் தட்பவெப்ப நிலை, பல்லேறு வகைப்பட்ட மர வகைகள் - விலங்கு இனங்கள், எல்லாவித உணர்ச்சி- அறிவு - மனச்சான்று, எல்லாவித விருப்புகள்-வெறுப்புகள் எல்லாவித நன்மைகள்-தீமைகள் எல்லாவித எண்ணங்கள் - கனவுகள், எல்லாவித நம்பிக்கைகள் -அச்சங்கள் இவையெல்லாம் அவசியத்தை யொட்டி எழுந்தனவாகும். இத்த எண்ணற்ற பொருள்களிலும் அவைபற்றிய தொடர்புகளிலும், இயற்கை விதிகளுக்கு மாறுபட்ட ஒன்று, இந்த அண்டத்தில் இருக்க முடியாது.

பொருளும் - ஆற்றலும் எல்லையற்ற காலந்தொட்டு இருந்து வருகின்றன வென்றால், மனிதன் அறிவுடைய படைப்பாளர் எவரையும் கொண்டிருந்ததில்லை; மனிதன் தனிப்படைப்பைச் சேர்ந்தவனல்லன், என்று நாம் எளிதிற் கூறலாம்.

நாம் ஏதாவது அறிந்திருக்கிறோம் என்றால், ஜெஹோவாவாகிய கடவுட் குயவனார், களிமண்ணைப் பிசைந்து, ஆண்- பெண் வடிவங்களைச் செய்யவில்லை; பிறகு அவர்களின் உடல்களில் ஊதி உயிர்க்காற்றை எழுப்பி, அவர்களைப் பிறப்பிக்கச் செய்யவில்லை என்பதைத் தெளிவாக நாம் அறிகிறோம்.

நமது முதல் பெற்றோர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதை நாம் அறிவோம், அவர்கள் இவ்வுலகைச்