உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மதமும் மூடநம்பிக்கையும்


ஆற்றலும், தோற்றம்— இறுதியற்றனவாக எல்லையற்றனவாக இருக்கின்றன வென்றால், கடவுள் என்று ஒருவர் இருக்கவில்லை; கடவுள் அண்டத்தைப் படைக்கவோ, ஆட்சிபுரியவோ செய்யவில்லை; வழிபாட்டுரைக்கும் பதிலுரைக்கும் கடவுள் இருக்கவில்லை; அவதிப்பட்டோர்க்கு உதவி புரியும் கடவுள் இருக்கவில்லை; அறியாத மக்களின் துன்பங்களைக் கண்டு இரக்கப்படும் கடவுள் இகுக்கவில்லை; உடலில் தழும்புகள் ஏற்ற அடிமைகள் பற்றியோ, குழந்தைகளிடத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தாய்மார்களைப் பற்றியோ கவலையுறும் கடவுள் இருக்கவில்லை; சித்ரவதைச் செய்யப்படும் மக்களைக் காப்பாற்றும் கடவுள் இருக்க வில்லை;நெருப்பிலே தள்ளப்படும் தன்னலமற்ற வீரர்களைக் காக்க முன்வரும் கடவுள் இருக்கவில்லை என்பது. தானே பெறப்படும். வேறு சொற்களால் குறிப்பிடவேண்டுமானால், மேலுலகத்திலிருந்து மனிதன் எந்தவித உதவியையும் பெறவில்லை; இடப்பட்ட பலிகளெல்லாம் வெறும் வீண்; வழி பாட்டுரைகளெல்லாம் பதிலுரைக்கப்படாமலேயே, வெறுங்காற்றில் மறைந்தொழிந்தன என்பதை இது தெளிவாக்கிக் காட்டுகின்றது என்னலாம். நான் எல்லாம் அறிந்திருப்பதாகப் பாசாங்கு செய்யவில்லை. நான் எதைச் சரி என்று சிந்திக்கிறேனோ அதையே சொல்கிறேன்.

பொருளும் ஆற்றலும் எல்லையற்ற காலத்திலிருந்து நின்று நிலவி வருகின்றன என்றால், நடக்கக் கூடியன வெல்லாம் நடந்து வந்திருக்கின்றன: நடக்கக் கூடியன வெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன; நடக்கக் கூடுவன வெல்லாம் இனி நடைபெறும் என்பது, தானே பெறப்படும்.

அண்டத்தில், இயற்கை எதிர்பார்க்காத வாய்ப்போ, காணாத திடீர் மாற்றமோ ஏற்பட வழியில்லை. ஒவ்வொரு