உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக்கு மீறிய ஒன்றா?

25


மூன்றாவது எல்லைக்கல், பொருளும் ஆற்றலும் பிரிந்து வாழ என்பதாகும்; ஆற்றலில்லாமல் பொருளெதுவுமில்லை. பொருளில்லாமல் ஆற்றலெதுவுமில்லை.

நான்காவது எல்லைக்கல், எது அழிக்கப்பட முடியாதோ அது உண்டாக்கப்பட முடியாது என்பதாகும்; அதாவது அழிக்க முடியாததை உண்டாக்க முடியாது.

இந்த எல்லைக் கற்கள் உண்மையானவைகள் என்று ஆகுமேயானால், பொருளும் ஆற்றலும் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில் எல்லையற்றவைகள் என்பது தானே பெறப்படும்; அவைகளை அதிகப்படுத்தவோ, குறைக்கச் செய்யவோ முடியாது.

இதிலிருந்து பெறப்படுவது. ஒன்றும் இதுவரை உண்டாக்கப்படவில்லை, உண்டாக்கப்பட முடியாது என்பதாகும். படைப்பாளர் என்று ஒருவர் ஒருபொழுதும் இருக்கவில்லை, இருக்கவும் முடியாது என்பதாகும்.

இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், பொருள் —ஆற்றல், இவைகளுக்குப் பின்னால் எந்த ஒரு அறிவோ அல்லது எந்த ஒரு அமைப்போ இருக்கமுடியாது என்பதாகும்.

ஆற்றல் இல்லாமல் அறிவு இருக்க வழியில்லை. பொருளில்லாமல் ஆற்றல் இருக்க வழியில்லை. எனவே, பொருளுக்குப் பின்னால் எந்த ஒரு அறிவோ அல்லது எந்த ஒரு ஆற்றலோ, எவ்வகையிலும் இருக்க வழியில்லை என்பது தானே பெறப்படுகின்றது.

இயற்கைக்கு மீறிய ஒன்று வாழவில்லை, வாழமுடியாது என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. இந்த நான்கு எல்லைக் கற்களும் உண்மைகள் தாம் என்றால், இயற்கைக்கு ஆண்டை என்று ஒருவர் இருக்க முடியாது. பொருளும்