உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மதமும் மூடநம்பிக்கையும்


உலகில் காணப்படும் உண்மைகளும் இருக்கின்றன அல்லவா? நாம் உடலை எப்படி இயற்கையான தாகக் கருதுகிறோமோ அதே அளவு உள்ளத்தையும் இயற்கையானதாகக் கருதுகிறோம் அல்லவா ?

இயற்கை ஓரு ஆண்டையைக் கொண்டிருக்கிறது; இந்த ஆண்டை வழிபாட்டுரையைக் கேட்பார்; இந்த ஆண்டை தண்டிப்பார், வரங்கொடுப்பார்; அவர் புகழ்ச்சியையும், துதிபாடுதலையும் விரும்புவார்; அவர் ஆண்மையாளரையும், விடுதலையாளரையும் வெறுப்பார் என்ற கோட்பாட்டின் மீதுதான் மதம் கட்டப்பட்டிருக்கிறது. மனிதன் மேலுலகிலிருந்து எந்த நன்மையாவது பெற்றிருக்கிறானா?

நாம் ஓரு கோட்பாட்டைக் கொண்டிருக்கிறோம். என்றால், அதன் அடிப்படைக்கான உண்மைகளை நாம் சொண்டிருக்கவேண்டும். அதற்கான நான்கு எல்லைகளை நாம் கொண்டிருக்கவேண்டும். அதனை ஊகித்தல், உணர்ச்சி கொள்ளுதல், கற்பனைசெய்தல், மனதிற்படல் ஆகியவைகளைக் கொண்டு நாம் உருவாக்கக் கூடாது. முழுத்தோற்றமும் நல்ல அடிப்படையைக் கொண்டிருக்கவேண்டும். நாம் அதனைக் கட்ட முற்படுகிறோம் என்றால், நாம் அதன் அடிப்படையிலிருந்தே துவங்கவேண்டும்.

நான் ஒரு கோட்பாட்டைக் கொண்டிருக்கிறேன்; நான் அதற்கான நான்கு எல்லைக் கற்களையும் கொண்டிருக்கிறேன்.

முதல் எல்லைக்கல், பொருள் அல்லது வஸ்து ஆகும்; அதனைச் சிதைக்க முடியாது, அழிக்க முடியாது.

இரண்டாவது எல்லைக்கல், ஆற்றல் ஆகும்; அதனையும் சிதைக்க முடியாது, அழிக்க முடியாது.