உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக்கு மீறிய ஒன்றா?

23


கொண்டவனாகவோ ஒருபொழுதும் செய்ய வில்லை.

காட்டுமிராண்டிகளை விட, கிருத்தவர்கள், மிக்கப் பண்புடையவர்களாகவும், மிக்க நல்ல எண்ணமுடையவர்களாகவும், மிக்க நாணயமுடையவர்களாகவுமா ஆக்கப்பட்டிருக்கிறார்கள்?

காட்டுமிராண்டிகளிடையில் கெட்ட பழக்கங்களும், கொடுமைகளும் நிரம்பி இருப்பதற்கு அவர்களுடைய அறியாமையும், மூட நம்பிக்கையுமே காரணங்களாகும் என்பதை நாம் அறியமாட்டோமா?

இயற்கையின் ஆற்றலையும், அமைப்பையும், ஒருமைப் பாட்டையும் உணர்ந்தவர்களுக்கு, மதம் பொருளற்ற ஒன்றாகவே படும்.

இயற்கையையோ அல்லது இயற்கைப் பொருள்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம் மாற்றிவிட முடியுமா? வழிபடுவதன் மூலம், அலைகளை விரிவுபடுத்தவோ அல்லது அடக்கிவைக்கவோ நம்மால் ஆகுமா? பலியிடுவதன் மூலம் காற்றுகளின் திசையை மாற்றிவிட நம்மால் இயலுமா ? மண்டியிடுதல் நமக்குச் சொத்துக்களைச் சேர்த்துத் தருமா ? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கிக்கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன்மூலம் நன்மையையோ அல்லது மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா?

புற உலகில் காணப்படும் உண்மைகள் எவ்வளவு அழுத்தமானதாகவும், அவசியத்தை ஒட்டி உற்பத்தி ஆக்கப்படுவதாகவும் இருக்கின்றனவோ, அதேபோல், அக