உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதம் 3


இயற்கைக்கு மீறிய ஒன்றா?

மதம், எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் பரப்பப்பட்டது; ஆனால் எது எங்கும், எப்பொழுதும் தோல்வியே அடைந்தது!

மதம், மனிதனை ஒருபொழுதும் அருள் நெஞ்சினனாகச் செய்யவில்லை.

மத விசாரணைக் குழுவின் கொடுமைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள் !

அடிமை வாழ்வை ஒழிப்பதில், மதம், எந்த அளவுக்குச் சாதனை புரிந்தது?

மதம், லிப்பி - சால்ஸ்பர்ரி - ஆண்டர்சன் வில்லி ஆகியோரின் கொடுமைகளைத் தவிர்க்க எந்த அளவுக்கு வேலை செய்தது?

மதம், அறிவியலுக்கு - ஆராய்ச்சி அறிவுக்கு சிந்தனைக்கு எப்பொழுதும் எதிரியாகவே இருந்து வந்திருக்கிறது.

மதம், மனிதனை விடுதலையுடையவனாக ஒருபொழுதும் செய்யவில்லை.

மதம், மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவோ, பண்புள்ளவனாகவோ, உழைக்கும் திறம் படைத்தவனாகவோ,