உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்மை செய்யும் ஆற்றல் எது?

21


கத்தோலிக்க மதக் குருமார்களை வாளுக்கிரை யாக்கினாள் போலும்.

பைபிளை நம்பிய பிராட்டெஸ்டண்டுகளின் உணர்ச்சி எப்படிப்பட்டது என்பதை, இந்த நிகழ்ச்சியி லிருந்து நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். வேறு சொற்களால் கூறவேண்டுமானால். கத்தோலிக்க உணர்ச்சி எவ்வளவு கொடுமையான தாகவும், கொடூரமான தாகவும் காணப்பட்டதோ அதே அளவு இதுவும் காணப்பட்டது என்னலாம்.

பைபிள், ஜியார்ஜியாவிலுள்ள மக்களை அன்புடையவர்களாகவும், அருளுடையவர்களாகவும் செய்திருக்கிறதா? கிருத்தவ மதக் கொலைகாரர்கள், மரக்கடவுள்களையும், கற்கடவுள்களையும் வணங்கியிருந்தால், இன்னமும் மிகவாகவா மூர்க்கத்தனமாய் இருந்திருப்பார்கள் ?