உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மதமும் மூடநம்பிக்கையும்


மதம் எதைக் கற்றுக் கொடுத்தது? அவர்கள் மகிழ்ச்சியை வெறுத்தார்கள்! அவர்கள் வாழ்க்கை வாயிலிலேயே சாவுத் துணியைக் கட்டித் தொங்கவிட்டார்கள்! அவர்கள் தொட்டிலையே பிணப் பெட்டியாக மாற்றினார்கள்! அவர்கள் பன்னிரண்டு மாதங்களையும் 'டிசம்பர்' மாதங்களாகவே கொண்டார்கள் ! அவர்கள் குழந்தைப் பருவத்தை வெறுத்தார்கள்; இளமையை வெறுத்தார்கள்; குழந்தைகளின் மழலை மொழிகளை வெறுத்தார்கள்; காலை மகிழ்ச்சிப் பாடலை வெறுத்தார்கள்!

பரிசுத்த மதம் முழுக்க முழுக்க 'சாபக்கேடாக' விளங்கிற்று ! பரிசுத்த மதத்தைச் சார்ந்தவன், பைபிளை ஆண்டவன் வாக்கு என்றே நம்பினான்; இந்த நம்பிக்கை கொண்டவர்கள்தான கொடுமையாளராகவும், கீழ்மையாளராகவும் காணப்பட்டார்கள் ! இப்படிப்பட்ட புனித மதத்தைச் சார்ந்தோர், வட அமெரிக்க இந்தியர்களின் மதத்தைப் பின்பற்றியிருந்தால், மிகக் கேடுகெட்டவர்களாகவா போயிருந்திருப்பார்கள் ?

பைபிளில் கொண்டிருந்த நம்பிக்கை, மனித சமுதாயத்தின் மீது எப்படிப்பட்ட ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது என்பதற்கு ஓரு உண்மையை உங்கள் நினைவிற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

அரசி எலிஸபெத்தின் முடிசூட்டு விழாவின்போது, ஒரு தொண்டு கிழவர், ஒரு ஜெனிவா பைபிளை, அரசியினிடத்தில் பரிசாக நல்கினாராம். கிழவர். காலத்தின் பழமைபோல் நின்றாராம்; அரசி, உண்மையின் தோற்றம் போல் குழந்தை வடிவில் நின்றாளாம்; அரசி அந்தப் பைபிளைப் பணிவன்போடு வாங்கிப், பக்தியுடன் முத்தமிட்டு, அதில் கூறப்பட்டிருப்பவைகளை அப்படியே கடைப்பிடிப்பதாக உறுதிமொழி கூறினாளாம். அந்தப் பைபிளைப் பெற்றதன் அறிகுறியாகத்தான், அரசி பயபக்தியோடு