உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதம் 4


எப்படிச் சீர்திருத்துவது?

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆடவரும் பெண்டிரும். உலகைச் சீர்திருத்தப் பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள், கடவுள்களையும், பூதங்களையும், மோட்சங்களையும், நரகங்களையும் உண்டாக்கிப் பார்த்தார்கள்; அவர்கள் புனித வேதங்களை எழுதிப் பார்த்தார்கள்; அதிசயங்கள் காட்டிப் பார்த்தார்கள்; கோயில்களையும் இருட்டறைகளையும் கட்டிப் பார்த்தார்கள்; அவர்கள், அரசர்களுக்கும் அரசிகளுக்கும் முடி சூட்டியும் பார்த்தார்கள். முடி கழற்றியும் பார்த்தார்கள்; அவர்கள் மக்களைச் சித்ரவதை செய்தும். சிறைபிடித்தும், தோலுரித்தும், நெருப்பிலிட்டும் பார்த்தார்கள்; அவர்கள் மத போதனை செய்தும் பார்த்தார்கள்: வழிபாட்டுரை கூறியும் பார்த்தார்கள்; அவர்கள், உறுதிமொழிகளை யளித்தும் பார்த்தார்கள்; அச்சுறுத்தல்களைச் செய்தும் பார்த்தார்கள்; அவர்கள், மகிழ்ச்சியூட்டிப் பார்த்தார்கள்; நயந்து கூறிப் பார்த்தார்கள்; அவர்கள் கற்றுக்கொடுத்தும் பார்த்தார்கள்: அதன்படி செய்யச் சொல்லியும் பார்த்தார்கள். அவர்கள், மக்கள் நாணயமாகவும், நேர்மையாகவும், கடும் உழைப்போடும், நல்ல நலத்தோடும் வாழ்வதற்கு எவ்வளவோ எண்ணற்ற வழிகளில் முயன்று பார்த்தார்கள்; அவர்கள். வைத்தியச் சாலைகளையும் வைத்திய விடுதிகளையும், பல்கலைக் கழகங்களையும், பள்ளிக்கூடங்களையும் கட்டிப் பார்த்தார்கள்;