உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மதமும் மூடநம்பிக்கையும்


அறியாமை, வறுமை, தீமை, ஆகியவைகள் பெருக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். ஒழுக்கப் போதனையின் மூலம் இதனைச் செய்துவிடமுடியாது. பேச்சின் மூலமோ எடுத்துக் காட்டின் வாயிலாகவோ இதனைச் செய்துவிட முடியாது. மதத்தினாலோ அல்லது சட்டத்தினாலோ, போதனை புரியவனாலோ அல்லது தூக்கு போடுபவனாலோ இதனைச் செய்துவிட முடியாது. உடலை வற்புறுத்துவதனாலோ அல்லது உள்ளத்தை வற்புறுத்துவதனாலோ இதனைச் செய்துவிட முடியாது. இதனைச் செய்யவேண்டுமானால், ஒரே ஒரு வழிதானிருக்கிறது!

அறிவியல், பெண்மகளை, அவளுக்கு அவளே சொந்தக்காரி என்றும், அதிகாரி என்றும் சொல்லும் வகையில், அவளை ஆக்கவேண்டும். மனித சமுதாயத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரே பாதுகாப்பாளனான அறிவியல், ஒரு பெண். தான் ஒரு குழந்தைக்குத் தாயாக ஆக வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளும் ஆற்றலை, அவள் கையில் கொடுக்க உதவி புரியவேண்டும்.

முழுக்கேள்விக்கு இதுதான் சிறந்த விடையாகிறது. இது பெண்களை விடுவிக்கிறது. இதனால் குழந்தைகள், வரவேற்கப்படும் குழந்தைகளாகவே பெற்றெடுக்கப்படுவார்கள். அக்குழந்தைகள் அன்போடு வாரி அணைக்கப்படுவர்; பரிவோடு பால் குடிக்க விடப்படுவர்; இல்லங்கள் தோறும் அவர்கள் ஒளியும் மகிழ்ச்சியும் ஊட்டுவார்கள்; இல்லங்கள் பொலிவோடும் பூரிப்போடும் காணப்படும்.

மக்களுக்கு விடுதலை வழங்குவதைவிட, அவர்களை அடிமை வாழ்வில் வைத்திருப்பதே உண்மையும் தூய்மையும் ஆகும் என்றும், அறிவு பெறுவதைவிட, அச்சங் கொண்டிருப்பதே பாதுகாப்புக்கான வழி என்றும், மற்றவர்களின் கட்டளைகளுக்கு யார் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களே உண்மையில் நல்லவர்கள் என்றும், அறியாமை என்னும் நிலத்தில்தான் நன்மை என்னும்