உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்படிச் சீர்திருத்துவது?

33


குழந்தைகளைப்பற்றிக் கவலைப்படாத-குழந்தைகளைப் பெருஞ் சுமைகளாகவும், 'சாபக்கேடு'களாவும் கருதுகின் ஆடவரும் பெண்டிரும் ஏன் குழந்தைகளைக் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கொண்டிருக்கவேண்டும்? ஏனென்றால் அவர்கள், அறிவைவிட மிக்க உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார்கள்; மனச்சான்றைவிட மிக்க உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள் ; பகுத்தறிவைவிட மிக்க உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள்!

எழுத்தின் மூலமாகவோ, பேச்சின் வாயிலாகவோ, நீங்கள், அவர்களைச் சீர்திருத்த முடியாது! போதனை புரிவதன் மூலமோ கொள்கையைச் சொல்லுவதன் வாயிலாகவோ நீங்கள். அவர்களைச் சீர்திருத்த முடியாது! உணர்ச்சி, இப்பொழுதும் சரி, எப்பொழுதும் சரி செவிடாகவே இருந்து வந்திருக்கிறது. சீர்திருத்தத்திற்காகக் கொள்ளப்பட்ட இந்தக் கருவிகளெல்லாம். எவ்வகையிலும் பயன்படாமல் போய்விட்டன. குற்றவாளிகள், நாடோடிகள், பிச்சைக்காரர்கள். தோல்வியுறுவோர் ஆகியோர் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகின்றனர். சிறைக் கூடங்கள், காவற்கூடங்கள், ஏழை விடுதிகள், பைத்தியக்கார விடுதிகள் ஆகியவை எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டே போகின்றன. மதம் ஏதும் செய்ய முடியாமல் தவிக்கிறது! சட்டம் மக்களைத் தண்டிக்கும்: ஆனால், அது குற்றவாளிகளைச் சீர்திருத்தவும் செய்யாது. குற்றத்தைத் தடுக்கவும் செய்யாது. தீமையின் அலைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தீமை ஆற்றல்களை எதிர்த்துத் தொடுத்திருக்கும் போர், இரவின் இருளை எதிர்த்துப் போரிடும் மின்மினிப் பூச்சிகளின் சண்டையைப்போல, பயனற்றதாகவே இருந்து வருகிறது.

ஆனால், ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் இருந்துவருகிறது!

2