உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூடநம்பிக்கையின் அடிப்படை

45


அந்தச் சமயங்களில், புரோகிதர்கள் தாங்கள் ஆண்டவனோடு நெருங்கிய பழக்கங்கொண்டவர்களாகவும், கிரகணங்கள், ஞாயிற்றின் கறைகள், வடக்கு வெளிச்சம் வால் தட்சத்திரம், விண்வீழ்கொள்ளி ஆகியவற்றிற்கான பொருள்களை அறிந்தவர்களாகவும், ஆண்டவனின் பொறுமை அற்றுப் போய்விட்டதையும், அவன் பழி வாங்க வாளைத் தீட்டிக்கொண்டுருப்பதையும் அறிந்து கொண்டவர்களாகவும்; இப்பொழுது உள்ள புரோகிதர்களைப் போலவே பாசாங்கு செய்தனர். அவர்கள் மக்கள் இவ்விதத் தொல்லைகளினின்றும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமானால், புரோகிதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன்மூலமும், செபமணிகளை உருட்டுவதன்மூலமும் பக்திக் காணிக்கையை இரட்டிப்பாக்குவதன் மூலமும் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவைத்தனர்.

நில அதிர்ச்சிகளும், பெரும் புயற்காற்றுகளும் மாதா கோயிலில் ஏராளமான மக்களைக் கொண்டுவந்து சேர்த் தன. பெருந்தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும் போதும், கஞ்சத்தனம் கொண்டவன், தன் நடுக்கங் கொண்ட கைகளால், பணப்பையைத் திறந்தான், கிரகணங்கள் ஏற்படும்போது, திருடர்களும், கொள்ளைக்காரர்களும் கடவுளோடு சேர்ந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களைப் பிரித்துக்கொண்டார்கள். ஏழ்மையும், நாணயமும், அறியாமையும் உடைய பெண்கள், தாங்கள் கடவுளுக்கு வழிபாட்டுரை கூறி மறந்துவிட்டோம் என்பதை நினைத்துக்கொண்டு, தாங்கள் சேர்த்துவைத் திருந்த சிறிதளவு தொகையையும் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.

நாம் இப்பொழுது அறிவோம், வானத்தில் நிகழும் வியப்புக்குரிய நிகழ்ச்சி - தோன்றும் அடையாளங்கள் ஆகியவற்றிற்கும், அரசர்கள், நாடுகள் அல்லது தனிப்பட்டவர்கள் ஆகியோர்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை,