உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மதமும் மூடநம்பிக்கையும்


என்பதை அவைகளுக்கும், உலகில் வாழும் எறும்புகள், தேனீக்கூட்டங்கள், பூச்சிகளின் முட்டைகள் ஆகியவற்றிற்கும் எவ்வளவு இணக்கம் உண்டோ அதில் கூடியதோ அல்லது குறைந்ததோ அல்ல. அவைகளுக்கும், மனிதர் களுக்கும் உள்ள இணக்கம் கிரகணங்கள் சில இடையீடுகளில் வரும் என்பதை நாம் அறிவோம். அவற்றின் வருகைகூட நம்மால் ஆராய்ச்சியின் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட முடிகிறது.

சில உயிரற்ற பொருள்கள்கூட, தொல்லைகளையும் துயரங்களையும் போக்கி, நன்மை பயக்கும் அருந்தன்மை கொண்டவைகளாகச் சில காலத்திற்கு முன்புவரையிலும் மக்களால் நம்பப்பட்டுவந்தன. புனிதமான ஆண்-பெண் துறவிகளின் எலும்புகள், பெரிய துறவி ஒருவரின் கிழிந்த துணி, தியாகம் செய்தோரின் மயிர், ஏசுவை அறைந்த சிலுவையிலிருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டு, ஏசுவை அறைந்த துருப்பிடித்த ஆணிகள், பயபக்தியுடையோரின் பற்கள்-விரல், நகங்கள் இன்னும் இது போன்ற பொருள்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றை அரும் பொருளென நம்பிவந்தனர்.

ஒரு எலும்புத் துண்டையோ அல்லது கிழிந்த துணியையோ அல்லது ஒரு மரத்துண்டையோ அல்லது புனிதத் தன்மை கொண்ட மயிர்களையோ கொண்ட பெட்டியை முத்தமிட்டால் அதுவும் காணிக்கை செலுத்றிவிட்டு முத்தமிட்டால் நோயாளியின் நோய் பறந்துவிடும் என்று நம்பப்பட்டது. இத்தகைய காணிக்கைகளால் மாதா கோவிலுக்கு ஏராளமான சொத்து சேர்ந்தது.

அத்தகை எலும்பு அல்லது கிழிந்ததுணி அல்லது மரத்துண்டு ஏதாவதொன்றிலிருந்து அதிசயிக்கத்தக்க நன்மைபுரியும் ஆவி, பெட்டியை விட்டு வெளிக்கிளம்பி நோயாளிடம் சேர்ந்து, கடவுள் சார்பாக அவன் உடலில்