உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூடநம்பிக்கையின் அடிப்படை

47


நின்று. அவன் நோய்க்குக் காரணமான பிசாசுகளை விரட்டியடிக்கும் என்று மூடத்தனமாக நம்பினர்.

நோய் தீர்க்கும் எலும்புத் துண்டுகள் கிழிந்த துணிகள், புனித மயிர்கள் ஆகியவற்றில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதற்கு, வேறோர் நம்பிக்கை மூலகாரணமாகும். அதுதான, நோய்களெலலாம் பிசாசுகளின் ஏவலின்பேரில் வருகின்றன என்று கொண்டிருந்த நம்பிக்கையாகும். சித்தம் கலங்கியவர்கள், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களே என்று நம்பினர். மயக்கமும், நரம்புத் துடிப்பும் சாத்தான் அனுப்பிய பிசாசுகளால் ஏற்படுபவை என்று கருதினர். சுருங்கக் கூறவேண்டுமானால், மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு தொல்லையும், நரக தேவனின் கொடிய ஏவலாளர்களால் உண்டாக்கப்படுவதாகும் என்று எண்ணினர். இத்தகைய நம்பிக்கை உலகெங்கும் இன்றைய நிலையில்கூட நிலவி வருகிறது. நமது காலத்திலேயேகூட கோடிக்கணக்கான மக்கள் புனித எலும்புகளின் தன்மையில் நம்பிக்கையும், பக்தியும் வைத்திருக்கத்தான் செய்கின்றனர்

ஆனால், இன்று, பிசாசுகள் இருப்பதை, எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவதில்லை! பிசாசுகள் நோய்கள் உண்டாக்குகின்றன என்பதையும் எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவதில்லை! மேலும், புனித எலும்புகளோ அல்லது மயிர்களோ, கிழிந்த துணிகளோ அல்லது மரத் துண்டுகளோ நோயைப்போக்கும் என்பதையும் இழந்த நலத்தை மீண்டும் கொண்டுவந்து சேர்க்கும் என்பதையும், எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவதில்லை!

அறிவுள்ள மக்களனைவரும் அறிவார்கள். அடிகளார் ஒருவரின் எலும்புத் துண்டு விலங்கு ஒன்றின் எலும்புத் துண்டைக் காட்டிலும் எந்த வகையிலும் சீரிய நன்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதை, அதுபோலவே ஒரு நாடோடிப் பிச்சைக்காரனின் கிழிந்த ஆடை, அடிகளார்