உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மதமும் மூடநம்பிக்கையும்


நிற்கக் கற்றுக்கொண்டவர்களுக்கு மோட்ச உலகத்தில் நன்மைகள் காத்துக்கொண்டு இருக்கும் என்றும், ஆனால் ஆசைகளுக்குக் கட்டுப்பட்டவர்களுக்குப் பூதம் இவ்வுலகிலேயே நன்மை புரியும் என்றும் பலரும் நம்பினர் மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள், பூதத்தோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற காரணத்திற்காக பல அத்தகையோர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எந்தக் கற்பனையாளராலும்கூட தீட்டிக்காட்ட முடியாது. நல்லவர்கள் கூட பூதத்தோடு தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுக் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டனர். அப்படிப்பட்ட காரணங்களால் அழிக்கப்பட்ட குடும்பங்கள், சிறையிலடைக்கப்பட்ட தாய் தந்தை மார்கள், சித்ரவதை செய்யப்பட்ட பெரியவர்கள், எரிக்கப்பட்ட சீலர்கள், அவிக்கப்பட்ட அடுப்புகள், கொல்லப்பட்ட குழந்தைகள், கைகால் முறித்திடும் பலகையில் கட்டப்பட்டுப் பிய்க்கப்பட்ட, சிதைக்கப்பட்ட வயதானவர்கள் - ஏழைகள் உதவியற்றோர் எத்தனை ஆயிரம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

மூடநம்பிக்கையும் அச்சமும் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடியிருந்த நாட்களைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்! குற்றஞ்சாட்டிய நல்லவர்களையே குற்றவாளியாகக் கருதப்பட்ட நாட்களையும், அறியாமையை வெளிப்படுத்துவதையே குற்றத்தை ஒப்புக்கொள்வதாகும் என்று கருதப்பட்ட நாட்களையும், கிருத்துவ உலகம் முழுவதும் மதிகலங்கியிருந்த நாட்களையும் சிறிது சிந்தித்துப் பாருங்கள்!

இந்தக் கொடுமைகளெல்லாம் மூட நம்பிக்கையின் விளைவுகள் என்பதை நாம் இப்பொழுது நன்கு அறிகிறோம். மக்கள் நுகர்ந்து வந்த வேதனைகளுக்கெல்லாம். அறியாமையே தாயாகும் என்பதை நாம் இப்பொழுது அறிகிறோம். மந்திர சாதனை என்பது ஒரு காலத்திலும் நிகழ்ந்ததில்லை என்பதையும் பூதத்தால் மக்கள் நன்மை