உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசயம்பற்றிய மூடநம்பிக்கை

51


யேதும் அடைந்ததில்லை என்பதையும் நாம் இப்பொழுது அறிகிறோம்; ஆனால் நமது காட்டுமிராண்டித் தன்ழையி லிருந்த பக்தியுள்ள முன்னோர்கள் அதுபற்றித் தவறாகவே எண்ணிவந்திருக்கின்றனர்.

நமது முன்னோர்கள் அதிசயவித்தைகளிலும், அதிசய நிகழ்ச்சிகளிலும், அடையாளங்களிலும், கிரகணங்களிலும் வால் நட்சத்திரங்களிலும், எலும்புகளின் மகிமையிலும், பேய் பூதம் பிசாசுகளின் நம்பிக்கை கொண்டடிருந்தனர். ஆற்றல்களிலும் முழு இவையெல்லாம் அதிசயப் பொருள்களாகவும், அதிசய நிகழ்ச்சிகளாகவுமே கருதப்பட்டன. இந்த உலகமானது மந்திரவித்தையால் நிரம்பப் பெற்றதாகவே கொள்ளப்பட்டது பேய்-பூதம்-பிசாசுகளெல்லாம் ஜாலவித்தை நிகழ்த்துவோராக அதாவது ஜாலவித்தைக்காரர்களாகக் கருதப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாக இயற்கையான காரணங்கள் உண்டு என்பதை முன்னோர்கள் உணர வில்லை. பூதம் ஒன்றை விரும்பும்; அது உடனே நிகழும் சாத்தானுக்குத் தன் 'ஆன்மா'வை ஒப்படைத்தவன், கைகால்களை ஆட்டுவான். சில புரியாத சொற்களைக் கூறுவான், அவ்வளவுதான். உடனே அவன் எதிர்பார்ப்பது நிகழும்! இதில் இயற்கையான காரணங்கள் இருப்பதாக நம்பப் பட்டதில்லை. ஏமாற்றமும் மதிமயக்கமும், பயங்கரமும் அதிசயமும் இவ்வுலகை ஆண்டுவந்தன. இவற்றிற்கெல்லாம் இருந்த அடிப்படை இப்பொழுது தகர்த்தெறியப்பட்டுவிட்டது: பகுத்தறிவு அவைகளைத் துரத்தியடித்து விட்டது. அறியாத்தன்மை, பொய்களுக்கு, நாக்குகளையும் இறக்கைகளையும் கொடுத்தது; அவைகள் பறந்தன; அப்பொழுது ஊமையாகவும் நொண்டியாகவும் இருந்த உண்மைகள் பின்னால் விடப்பட்டன; அவைகள் அலட்சியப்படுத்தப்பட்டு, வெளிப்படுத்தப்படாமல் பின் தங்கின.