உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மதமும் மூடநம்பிக்கையும்


அதிசயம் என்றால் என்ன? இயற்கையின் ஆண்டை யான ஆண்டவன், இயற்கையின் உண்மைகளுக்குத் தொடர்பில்லாதவகையில், ஒன்றினைச் செய்துகாட்டுவது. இதுதான், அதிசயம் என்பதற்கு நாணயமாகச் சொல்லக் கூடிய பொருளாக இருக்க முடியும்.

ஒரு மனிதன் முழுவட்டம் ஒன்று வரைந்து, அதன் விட்டம், வட்டத்தின் சுற்றளவில் சரிபாதியாகும் என்று கூறுவானேயானால், அது பூகணிதத்தில் அதிசயமாகக் கருதப்படும். ஒரு மனிதன் நான்கு என்ற எண்ணை இரண்டு தடவையாகக்கூட்டி ஒன்பது வருகிறது என்று காட்டுவானேயானால், அது கணிதத்தில் அதிசயமாகக் கொள்ளப்படும். ஒரு மனிதன் கல் ஒன்றை ஆகாயத்தில் தூக்கி எறிந்து, அது விழும்பொழுது முதல் நொடியில் பத்து அடி தாண்டி, இரண்டாவது நொடியில் இருபத்தைந்து அடி தாண்டி, மூன்றாவது நொடியில் ஐந்து அடி தாண்டுமேயானால். அது இயற்கைப் பொருளியலில் அதிசயமாகக் கருதப்படும். ஒரு மனிதன் உயிர்க்காற்று நீர்க்காற்று உப்புக்காற்று மூன்றையும் கலந்து, தங்கத்தைச் செய்து காட்டுவானேயானால், அது கலவையியலில் அதிசயமாக ஏற்கப்படும். ஒரு மதபோதகன் தன் மதக் கொள்கையொன்றை நிரூபித்துக் காட்டுவானேயானால், அது மதயியவில் அதிசயமாக மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சி ஒன்று ஐம்பது சத வெள்ளிப்பணத்தை ஒரு டாலரின் மதிப்புக்கு உயர்த்திக் காட்டுமேயானால் அது பொருளியலில் அதிசயமாக எண்ணப்படும். சதுரத்தை அப்படியே முக்கோணமாக ஆக்கிக்காட்டுவது சிறந்த அதிசயமாகக் கருதப்படும். ஒரு நிலைக்கண்ணாடி தனக்கு முன்னால் நிற்பவர்களைக் காட்டாமல், தனக்குப் பின்புறமாய் நிற்பவர்களைக் காட்டுமேயானால், அதுவே ஒரு பெரிய அதிசயமாக நினைக்கப்படும். ஒரு கேள்வி கேட்டு, அதன் எதிரொலி அந்தக்கேள்விக்கான விடையாக வருமேயானால், அது அதிசயங்களில் ஒன்றாகக் போற்றப்