உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசயம்பற்றிய மூடநம்பிக்கை

53


படும். சுருங்கச் சொல்லுவதானால், இயற்கையின் உண்மைகளுக்கு மாறாகவோ, அல்லது இயற்கையின் உண்மைகளை அலட்சியப்படுத்தியோ செய்து காட்டப்படும் எந்த ஒரு செயலும் அதிசயத்தின்பாற்படும்!

இப்பொழுது, நாம் 'இயற்கையின ஒருமித்த நியதி" என்று சொல்லப்படுவதொரு கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம். அதனதன் இயற்கைப் பண்புகளுக்கேற்ப ஓவ்வொரு பொருளும் நடக்கின்றது. அல்லது நடத்துவிக்கப்படுகின்றது என்பதை நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். ஒரேவிதமான சூழ்நிலையில் முடிவுகளெல்லாம் ஏறத்தாழ ஒரேவிதமாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். ஒரேவிதமான பொருள்கள் ஒரேவிதமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன; ஒரேவிதமான பொருள்கள் ஒரேவிதமான பொருள்களையே உற்பத்தி செய்யும் என்பதையும் நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். எனவே. இப்பொழுது, நிகழ்ச்சிகளுக்கு இயற்கையான பெற்றோர்கள் உண்டு என்பதையும், அவைகளில் எவையும் குழந்தையில்லாமல் செத்துப்போகாதென்பதையும் நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

'அதிசயக் காட்சிகள்' அனைத்தும் நடைமுறைக்கு என்பதுமட்டுமல்லாமல், அவையெல்லாம் எந்த தல்ல சிந்தனையாளனாலும் சிந்திக்கப்படமுடியாத வையுமாகும்.

இப்பொழுது, நல்லறிவு படைத்த எவனும், அதிசயக் காட்சியொன்று நடத்திக் காட்டப்பட்டது என்பதையோ, இனி நடத்திக் நடத்திக் காட்டப்படும் என்பதையோ ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அதிசயக் காட்சிகள்பற்றிய நம்பிக்கை, அறியாமை என்னும் நிலத்தில்தான், வளருகிறது!