உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூடநம்பிக்கை 4

நல்ல ஆவிகளும் கெட்ட ஆவிகளும்

நமது முன்னோர்கள், வான இருளில், மனித சமுதாயத்திற்கு மாறுபாடான கெட்ட ஆவிகள் வாழ்ந்தன என்று கருதியது போலவே, நல்ல ஆவிகள் பலவும் உலாவின என்றும் நம்பினர். கெட்ட ஆவிகள் சாத்தானிடம் எப்படிப்பட்ட உறவைக் கொண்டிருந்தனவோ, அதே வித மான உறவைத்தான், நல்ல ஆவிகள், கடவுளிடம் கொண்டிருந்ததாக அவர்கள் கருதினர். கெட்ட ஆவியின் ஆசை வார்த்தைகளினின்றும், தூண்டுதல்களினின்றும், பயபக்தி உடையவர்களைக் காப்பாற்றுவதே நல்ல ஆவிகளின் தொழில். யார் யார் தாயத்துக்களைக் கட்டிக் கொண்டும் மந்திரங்களைச் செபித்துக் கொண்டும், வழிபாட்டுரைகளைச் சொல்லிக்கொண்டும், செபமணிகளை உருட்டிக்கொண்டும். நோன்புகள் எடுத்துக்கொண்டும், சடங்குகள் செய்துகொண்டும், இருந்தார்களோ அவர்களைப்பற்றி அந்த நல்ல ஆவிகள் கவலை செலுத்தி, அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தன என்றும் நம்பப்பட்டது. பயபக்தி உடையவர்களின் மார்பில் வாள் வீசப்பட்டாலோ அல்லது அம்பு பாய்ச்சப்பட்டாலோ, உடனே அந்த நல்ல ஆவிகள் சென்று அவைகளைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு நன்மை செய்யும் என்றும் கருதப்பட்டது. உண்மை நம்பிக்கையாளரைப் பொறுத்து, அவர்கள்,