உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல ஆவிகளும் கெட்ட ஆவிகளும்

55


நஞ்சைக் கெடுதியற்றதாக ஆக்கவும், அறியாத்தன்மைக் குப்பாது காப்பாக இருக்கும், வேறு ஆயிரக்கணக்கான வழிகளில் மக்களுக்கு ஆதரவு தரவும், மீட்சி கொடுக்கவும் ஆன தொண்டுகளைப் புரிந்துவந்தன என்றும் கொள்ளப்பட்டது. அவைகள் பயபக்தியுடையவர்களின் உள்ளத்திலிருந்து ஐயப்பாடுகளைப் போக்கின அவர்களுடைய உள்ளத்தில் அறியாத்தன்மை பயபக்தி ஆகிய விதைகளைத் தூவின: பெண்களின் ஆசை வலைகளினின்றும் மகான்களை மீட்டன; உண்ணா நோன்பு இருந்தும் வழிபாட்டுரை கூறியும் வாழ்ந்துவந்தவர்களுக்காக, மோட்ச லோகத்தின் தன்மைகளை விளக்கிக் கூறின. பயபக்தி கொண்ட நல்லவர்களை உணர்ச்சி இன்பங்களை மறக்கச் செய்யவும், சாத்தானை வெறுக்கச் செய்யவும் பேருதவி புரிந்தன என்றெல்லாம் நம்பப்பட்டன.

அந்த நல்ல ஆவிகள் ஞானமுழுக்கு செய்யப்பட்ட குழந்தைகளை ஓம்பின; புனித சூளுரைகளுரைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தன; கடவுளை நம்பின புரோகிதர்கள், சந்நியாசினிகள், நாடோடிப்பிச்சைக்காரர்கள் ஆகியவர்களைக் காப்பாற்றி வந்தன!

இந்த நல்ல ஆவிகளிலும் பலவகைகள் இருந்தன! சில ஆண்களாகவும், பெண்களாகவும் இவ்வுலகில் வாழ்ந்திருந்தன; சில இவ்வுலகில் வாழ்ந்ததேயில்லை; சில ஆரம்பகாலத்திதிருந்தே தேவதைகளாக இருந்தன! அவைகள், சரியாக எப்படிப்பட்டவைகள் என்பது பற்றியோ, அல்லது அவைகள் எப்படித் தோற்றமளித்தன என்பது பற்றியோ, அல்லது அவைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எவ்வழியாகப் போயின என்பது பற்றியோ, அல்லது அவைகள் எப்படி மனிதர்களின் உள்ளத்தைப் பாதித்தன அல்லது உள்ளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தின என்பதுபற்றியோ திட்டவட்டமாகக் கூறினவர்கள் யாருமில்லை!