உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதைகள் பறந்துவிட்டன!

63


என்றால், இவைகள் நோயை உண்டாக்கவில்லை என்றால், இவைகள் மக்களுக்கு ஆசைகாட்டி, அவர்களைத் தவறான வழியில் இழுத்துச் செல்லவில்லை என்றால், பிறகு, கிருத்து, அறியாமை நிரம்பியவராகவும், மூட நம்பிக்கை மனிதராகவும்,மனங்குழம்பியவராகவும், ஏமாற்றுக்காரராகவும்தான் இருக்கவேண்டும்; அல்லது, அவர் சொல்லியதாகவும் செய்ததாகவும் சொல்லப்படுகிற புதிய வேதம் என்பது, உண்மையான பதிவாக இருக்கமுடியாது. நாம் பேய் – பூதம் – பிசாசு பற்றிய நம்பிக்கையைக் கைவிடுகிறோம் என்றால், பழைய - புதிய வேதங்களின் கடவுள் கருத்துக்களையும் நாம் கைவிடத்தான் வேண்டும் ! நாம் கிருத்துவின் கடவுள் தன்மையைக் கைவிடத்தான் வேண்டும்! தீய ஆவிகள் இருப்பதை மறுப்பது என்பது கிருத்தவ மதத்தின் அடிப்படையையே அடியோடு அழிப்பதாகும். அப்படிக் கிப்படிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இரண்டிற்கும் ஒத்தவொரு சமாதானம் தேடுவது ஆகாத ஒன்றாகும். புதிய வேதத்தில் சொல்லப்பட்ட பிசாசுகளை விரட்டுவதுபற்றிய கருத்துக்களெல்லாம் தவறு என்று ஆயினால், பின்னர் அந்த புனித நூலின் எந்தப்பகுதிதான் உண்மையாக இருக்கமுடியும்?

அதன் உண்மைவழிப் பார்க்கப்போனால், ஏடன் தோட்டத்தில் சாத்தானுக்கு ஏற்பட்ட வெற்றியின் விளைவே கிருத்துவைத் தோற்றம் செய்யும்படியான அவசியத்திற்குக் கொண்டு வந்துவிட்டது. கிருத்து உயிர்த்தியாகம் செய்வதற்கு வழி அமைத்தது; கிருத்துவைச் சிலுவையில் அறைந்தது; தந்தை–மகன்–புனிதப்பிசாசு ஆகிய மூன்றும் சேர்ந்து முத்தன்மையை நமக்குக் கொடுத்தது!

சாத்தான் வாழவில்லை என்றால் கிருத்துவமதக் கருத்துக்கள் அத்துணையும் சிதறுண்டு போகும்; "கிருத்தவம"