64
மதமும் மூடநம்பிக்கையும்
என்று சொல்லப்படுகிற பெருங்கட்டிடம் முழுவதும் எரிந்து போய்விடும்? பாதிரிமார்களாலும் குருமார்களாலும், புரோகிதர்களாலும் மதவாதிகளாலும், தவறுகளாலும் பொய்மைகளாலும், ஜாலவித்தைகளாலும், அதிசயங்களாலும், குருதியினாலும், நெருப்பினாலும், காட்டுமிராண்டிகளிடமிருந்து கற்றுக்கொண்ட பொய்களாலும் பொய்மைக் கதைகளாலும் கட்டப்பட்ட “கிருத்தவம்" என்ற அந்தப் பெருங்கட்டிடம் உருத்தெரியாமல் அழிந்து போய்விடும்!
பூதங்களிடத்தும் தீய ஆவிகளிடத்தும் கொண்டிருந்த நம்பிக்கையை நாம் கைவிடுவோமேயானால், பேயாட்டுபவள் என்று ஒருத்தி வாழ்ந்திருக்கமுடியாது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியவர்களாவோம் இப்பொழுது அறிவுள்ள எந்த மனிதனும், பேய் - பூதம்- பிசாசு ஆகியவற்றை அடக்கியாளும் தன்மையில் நம்பிக்கை கொள்வதில்லை. அது ஒரு ஏமாற்று வித்தையாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நடைபெற முடியாத ஒரு குற்றத்தைச் செய்தார்கள் என்ற காரணத்துக்காக,ஆயிரமாயிரம் ஆடவரும், பெண்டிரும், குழந்தைகளும். சித்ரவதை செய்யப்பட்டும், கொளுத்தி எரிக்கப் பட்டும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டும் போயினர் என்பதை நாம் இப்பொழுது அறிகிறோம். மத நம்பிக்கையால் நமது உள்ளங்கள் பாழ்படாமலிருந்திருக்குமேயானால். பேயாட்டுபவர்கள் வாழ்ந்ததைப்பற்றிக் கற்பிக்கிற புத்தகங்களெல்லாம் அறியாமையும் மூடநம்பிக்கையும் கொண்டவர்களாலேயே எழுதப்பட்டன என்பதை நாம் இப்பொழுது நன்கு அறியலாகும். பேயாட்டுபவர்கள் வாழ்ந்ததைப் பழைய வேதம் உறுதிப்படுத்துகிறது என்பதையும் நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம். அந்தப் 'புனித வேத'த்தின்படி, ஜெகோவா பேயாட்டுவதில்