இது தெரியாதாம் அது தெரியுமாம்!
77
எந்த முடிவை எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் அறிந்திருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணுக்குப் புலனாகாத அதிசயங்களெல்லாம் புலனாகின்றன; ஆனால் ஒரே ஒரு அதிசயம் மட்டும் புலப்படுவதில்லை; அதுதான், உயிருள்ள மனிதன் வாழ்வில், அவனுடைய உணர்ச்சிகளோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்கிற பொருள்களைப்பற்றிய அதிசயமாகும்!
ஆனால், நாணயமான மனிதர்கள், தாங்கள் எல்லாம் அறிந்திருப்பதாகப் பாசாங்கு செய்வதில்லை; அவர்கள் உண்மையாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடியவர்கள் அவர்கள் உண்மையை விரும்புகிறவர்கள்; அவர்கள் தங்கள் அறியாமையை நாணயத்தோடு ஒப்புக்கொள்கிறவர்கள்: "நாங்கள் அதனை அறியமாட்டோம்" என்று சொல்லிவிடக்கூடியவர்கள்.
இவை எல்லாவற்றையும் கூர்ந்து பாருங்கள்; நாம் ஏன் அறியாமையை வணங்கவேண்டும்? 'அறியமுடியாத ஒன்று'க்கு நாம் ஏன் முழங்காற்படியிட்டுக் கிடக்கவேண்டும்? ஊகித்துக்கொண்ட ஒரு பொருளின் முன்னால் நாம் ஏன் வீழ்ந்து கிடக்கவேண்டும்?
கடவுள் இருக்கிறார் என்றால், அவர் நல்லவர் என்றும், அவர் நமக்காகக் கவலை கொள்கிறார் என்றும் நாம் எப்படி அறிவது? கடவுள் அறிவாளியாகவும் நல்லவராகவும். எல்லையற்ற காலந்தொட்டு இருந்து வருகிறார் என்றும், அவர் எப்பொழுதும் இருக்கிறார் என்றும், அவர் இனியும் எல்லையற்ற காலம் வரையில் இருப்பார் என்றும் கிருத்தவர்கள் கூறுகிறார்கள். இந்தக் கடவுள் தம் கடவுள் தன்மையை அகற்றிவிட்டு வாழக்கூடியவரா ? அவர், தம்முடைய நல்ல தன்மையை அகற்றிவிட்டு வாழக்கூடியவரா? அவர், தம்முடைய விருப்பமோ, குறிக்கோளோ அற்ற தன்மையில், அறிவாளியாகவும், நல்லவராகவும் வாழக் கூடியவரா?