உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மதமும் மூடநம்பிக்கையும்


கள் இயற்கைக் காரணங்கள் எல்லாவற்றினின்றும் தனித்து வாழ்கின்றன! ஏமாற்றம் அரசனாக வீற்றிருக்கிறது அடிப்படை போய்விட்டது! கோபுரம் காற்றில் மிதக்கிறது! பண்புகளிடையிலோ அல்லது உறவுகளிடையிலோ அல்லது முடிவுகளிடையடையிலோ ஒரு ஒற்றுமை கிடையாது! பகுத்தறிவு நாடு கடக்கிறது; மூடநம்பிக்கை முடிசூட்டிக் கொள்கிறது;

இதயம் இறுகுகிறது; மூளை பலவீனமாகிறது!

இயற்கையை மீறிய ஆற்றலின் பாதுகாப்பை அடையவேண்டும் என்ற முயற்சியில் மனிதனுடைய ஆற்றல் களெல்லாம் கொன்னே கழிக்கப்படுகின்றன. நாணயமான உழைப்பு – ஆராய்ச்சி – அறிவின் முயற்சி – நோக்கு – அனுபவம் ஆகியவற்றின் இடங்களைக் கொடுமை – சடங்கு – வழிபாடு – பலி – வழிபாட்டுரை ஆகியவைகள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன; முன்னேற்றம் என்பது முடியாத தொன்றாக ஆகிவிட்டது.

மூடநம்பிக்கை, விடுதலையுணர்ச்சியின் பகையாகவே எப்பொழுதும் இருந்துவருகிறது; எப்பொழுதும் இனியும் இருந்துவரும்.

மூட நம்பிக்கைதான், எல்லா கடவுள்களையும் தேவதை களையும் உண்டாக்கிற்று; எல்லா பூதங்களையும், பேய்களையும் உண்டாக்கிற்று; எல்லாப் பிசாசுகளையும், மாந்திரீகர்களையும் உண்டாக்கிற்று; நமக்குக் குறி சொல்வோரையும், அவதார புருஷர்களையும், தேவதூதர்களையும் கொடுத்தது; வானவெளியில் மோட்சஉலகின் அறிகுறிகளையும் அதிசயங்களையும் நிறையச் செய்தது; காரண காரியத்திற்கிடையே இருந்த தொடர்புச் சங்கிலியை அறுத்தது; அற்புதங்களும் பொய்களும் நிறைந்ததான மளித வரலாற்றை எழுதிற்று