உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இது தெரியாதாம் அது தெரியுமாம்!

83


மூடநம்பிக்கை பாதிரிமார்களையும் குருமார்களையும் போதகர்களையும் புரோகிதர்களையும், ஆண் துறவிகளையும், பெண் துறவிகளையும், பிச்சை எடுக்கும் மந்திரக்காரர்களையும், குற்றம் புரியும் மகான்களையும், மதவிளக்கங் கூறுவோரையும், மதவெறி கொண்டோரையும், 'அப்படிப்பட்டவர்'களையும், 'இப்படிப்பட்டவர்'களையும் ஏற்படுத்திற்று! மூட நம்பிக்கை மனிதர்களை, விலங்குகள் - கற்கள் ஆகியவற்றின் முன்னால் மண்டியிட்டு விழும்படி செய்தது; பாம்புகளையும், மரங்களையும், காற்றில் வாழும் பைத்தியக்கார பிசாசுகளையும் வணங்கும்படி அவர்களைத் தூண்டியது; பொன்னும் உழைப்பும் வீணாகும்படி அவர்களுக்குத்தப்புவழி கற்பித்தது குழந்தைகளின் குருதியை அவர்கள் சொரியும்படி செய்தது தீச்சுழலில் குழந்தைகளைத் தள்ளி அவர்கள் கொளுத்தும் படிசெய்தது! மூட நம்பிக்கை, எல்லாவித மடாலயங்களையும் ஈசுவரன் கோயில்களையும் கட்டிற்று; எல்லா வகை மாதா கோயில்களையும், மசூதிகளையும் கட்டிற்று; உலகத்தில் தாயத்துக்களையும் மந்திரங்களையும் கொண்டுவந்து நிரப்பிற்று; கடவுள் பொம்மைகளையும் கடவுள் உருவச்சிலைகளையும் கொண்டுவந்து சேர்த்தது; புனித எலும்புகளையும் பரிசுத்த மயிர்களையும் கொண்டுவந்து காட்டிற்று; மதத் தியாகிகளின் குருதியையும் அவர்களின் கிழிந்த துணிகளையும் கொண்டுவந்து வைத்தது;மனிதர்களின் உடலிலிருந்து பேய்களை விரட்டும் என்று சொல்லி மரத்துண்டுகளைக் கொண்டுவந்து நிரப்பிற்று! மூட நம்பிக்கை,சித்ரவதைக்கான கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றைப் பயன்படுத்தச் செய்தது; ஆடவரையும் பெண்டிரையும்உயிரோடு வைத்துச் சித்ரவதைக்கு ஆளாக்கியது; கோடிக்கணக்கான மக்களுக்கு விலங்குகளைப் பூட்டிற்ற ; நூறாயிரக்கணக்கான வர்களை நெருப்பிலிட்டு அழித்தது! மூடநம்பிக்கை பைத்தியக்காரத்தனத்தை அந்தராத்மாவின் ஆலோசனை என்று தவறாக எடுத்துக் கொண்டது; பைத்தியக்காரர்கள் உளறுவதை அசரீரிவாக்காக, எண்ணிக்கொண்டது; மகான்கள் மனங்குழம்பிக் கூறுவதை ஆண்டவனின் அறிவு என்று