உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மதமும் மூடநம்பிக்கையும்


இப்படிப்பட்ட உண்மைகளையெல்லாம் நேர்நிறுத்திப் பார்க்கும்போது, மதம் என்பதுதான் என்னவாகத் தோன்றுகிறது?

மதம் என்பது அச்சம்!

அச்சம்! கடவுள் பீடத்தைக் காட்டியதும், பலியைக் கொடுத்ததும் அதுதான் !

அச்சம் ! கோயிலை எழுப்பியதும், வழிபாட்டில் மனிதனின் தலையைக் குனியவைத்ததும் அதுதான்!

அச்சம்! முழங்கால்களை மண்டியிடச் செய்ததும், வேண்டுதலையை மொழியச் செய்ததும் அதுதான் !

மதம், அடிமைப் பண்புகளான, பணிந்து நடத்தல், அடங்கியொடுங்கியிருத்தல், தன்னை வெறுத்தல், மன்னித்து விடுதல், எதிர்த்துப் போராடாமை முதலியவற்றைக் கற்பிக்கிறது!

மதப்பக்தியும், அச்சத் தன்மையும் கொண்ட உதடு கள், "அவன் என்னை வெட்டி வீழ்த்துகிறதானாலும், நான் அவனிடம் நம்பிக்கை வைக்கத்தான் செய்வேன்" சொற்றொடரை ஓயாமல் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே யிருக்கின்றன. இதுதான் மனித வீழ்ச்சிக்குக் காரணமாகும் தாழ்வுப் படுகுழியாகும்.

மதம், தன்னம்பிக்கை — விடுதலை வேட்கை — மனிதத் தன்மை — உறுதி - தற்காத்தல் போன்ற பண்புகளை ஒருபோதும் மனிதனுக்குக் கற்றுக்கொடுப்பதில்லை.

மதம், கடவுளை ஆண்டையாகவும், மனிதனை அவருக்கு அடிமையாகவும் ஆக்குகிறது. அடிமை வாழ்வை இனிமையாக ஆக்குவதால், ஆண்டை பெருந்தகையாளராக ஆகிவிடமாட்டார்!