260 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
என் தேவன் வீரத்திற் கோர் இழுக்கு விளேத்தது. எனக்கும் பழிபாவம் விளைத்தது; என் உறவினற்கும் ஊறு விளைத்தது. இக்கொடுஞ் செயலேமேற் கொண்ட பாவியேனேயும் மணந்து கோடற்கு ஒருப்படுகியோ?-அறிவுடை யாய்! அன்புடையாய்! அறியாது செய்தனென்! இப்பிழை பொறுத்தெனே யாண்டருள்க' என்று கூறி வணங்கினள். அவ்வளவிற் சிறிது கண்ணிர் துளித்த மதிவாணன் காதலி மயங்கலே கின் துணிவிற்கு வியப்புறுகின்றேன். தற்காப்பினிமித்தம் நீ இன்னணஞ் செய்தன. மனமில் வழிப் புரிந்த செயற் குப் பாவமுமில்லே பழியுமில்லே எனினும் மனமட்டில் துயருருகிற்கும். அஃது. அதற்கியற்கை கண்டாய்" என்றுரைத்து உழையிருந்த மக்களுதவி கொண்டு மதிவாணன் மாயவனே வாரியெடுத்து இன்பவல்லியைக் கொணர்ந்த கட்டிலின் மீதிருத்தி மதுரை மாநகரத்தின்கனுள்ள பெருமருத்துச் சாலைக்கு உடனே, யனுப்பினன். அம்மாயவற் குதவியாக மக்கள் பலர் மதிவான குணேயின் மேல் உடன் சென்றனர். ; அதன்மேற் குதிரையேற்றங் கைவந்த இன்பவல்லி மதிவாணனது கலி, மாவின் மேற்கொள்ளலும் மதிவாணன் மாயவன் புரவிமேற்கொண்டு இரு வருமாகப் பூவனம் போயினர். பின்னர் மாலைப்போழ்தத்து வேறு பரிகள் புனேயப் பெற்றுப் போதாலும், அவற்றின் மீதேறி நம்பியும் கங்கையும், பலர். புடைசூழ்ந்து ஒடிவா, மதுரையம்பதிக்குட் புகுந்தனர்.
நாளத் தாமரை கங்கை யெனத்தக்காள் வாளிற் றன்றலை வன்பகை வோனது தாளை வீசுபு தான்றுணி செய்யுமா மூளு மன்பின் முதிர்ச்சியு மென்கொலோ! (26). ஏழாம் அத்தியாயம் முற்றிற்று .
بیبیسی بیب-بیچججب مجeجست-جمه
எட்டாம் அத்தியாயம்
குற்ற வாராய்ச்சி
இதற்கிடையில் இன்பவல்லி காணுமற்போனது முதல் மாயவன் காறு ணிந்து வீழ்ந்ததுகாறும் யாவுமுணர்ந்த மாவிாவழுதி துக்கமும் வியப்பும் மகிழ்வும் ஒருங்கெய்தி மகளது வரவையும் மருகனது வாவையு மெதிர் பார்த்து கின்றனன்; நிகழ்ந்த நிகழ்ச்சிகளை யெண்ணி யெண்ணிப் பல்வகை மெய்ப்பாடுகளு முற்றனன்.
சிறைக்கோட்டத்தின்கணிருந்த மாயவன் என்னணம் அதனிற்நப்பி வெளிப்போந்தனன்? எவ்வாறு அவன் அரண்மனையிற் கன்னிமாடம் புக் கனன்? கன்னிமாடங்காவலின்றி யிருந்ததுகொல்? என்குல விளக்கை அவன் எவ்வழியானெடுத்தேகினன்? எப்படி புரிசை கடந்தனன்? ஒ மாம்ாயம்