பக்கம்:மதி (நாடகம்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மதி காட்சி 4 (வேலப்பர் வீடு.) (வேலப்பர் சுகுளுவை அழைத்துத்தன் திரு மண விருப்பத்தை வெளியிடுகின்ருர். நீண்ட காரசாரமான விவாதம்.) வேலப்பர் : வா சுகுளு ! சுகுளு : . சுகுளு, வாம்மா சுகுணு என்றழைத்தால் உங்கள் வாய் முத்து சிந்திவிடுமோ ? கண்ணம்மாள் : அந்த வாய்முத்தெல்லாம் சிந்தித்தான் ரொம்பொ நாளாச்சே. இப்போ இருக்கிற முத்தெல் லாம் டாக்டர்கிட்டே வாங்கினது. வேல: ஏய் உள்ளேபோ. ஒரு ஆம்பளையும் பொம்பளை யும் பேச ஆரம்பிக்கிறபோதே குறுக்கெ வந்து விழறே. சுகுணு உன்னே அம்மா என்று அழைக்காதற்குக் காரணம் இருக்கிறது. - சுகுளு : காரணத்தை நான் தெரிந்து கொள்ளாமலா? அேல: அதை சொல்வத்தான் அழைத்தேன். உங்கப்பா இறந்தப்போ எங்கிட்டே கொடுத்துட்டுப் போன பத்திரத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பு கிருயா? - * . . சுகுணு : இல்லை. தாங்களே எல்லாம் என்று அவர் சொல்லிவிட்டுப்போன பிறகு ந - ன் தெரிந்து கொள்ள நினைப்பது அவ்வளவு நல்லதல்ல என்று. நினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/20&oldid=853517" இலிருந்து மீள்விக்கப்பட்டது