பக்கம்:மதி (நாடகம்).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு அவர்கள் இட்டிய நாடகம். அவரது அறிவின் அடிவாரத்திலே பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதையல். அதைவெளியே கொண்டுவருகிருேம். முகப்புப் படத்தின் முக்கியத்வத்தைப் பாருங்கள் ! மூவர்ணமா முக்கியம் ? இல்லை : இதோ நீதிமன்றத்தில் ஓர் ஒப்புயர்வற்ற அறிஞனே நீதிபதியாக நிறுத்திவிட்டார்கள் நமது ஓவிய நிபுணர்கள். உட்ை கருப்பு, உள்ளமோ வெள்ளே உள்ளம், ஆம் நெஞ் சிலே நீதித் தராசு , அட்டைப் படத்தைப் பற்றி அவ்வளவு அ றி மு க ம் போதும். நடமாடும் நந்தவனத்தில் நுழையுங்கள். அமரநாதர், ஆளியூர் ஜமீன்தார் சாவின் முனையிலே தன் மகள் சுகுணுவின் வாழ்வுக்கு வேலப்பர் என்பவர் தான் வேலி என்ற முறை யிலே உயில் எழுதி வைத்துவிட்டுச் செல்கிருர், ஆனால், அந்த வேலியே பயிரை மேயும் மாடாக ஆகிவிடுகிறது. வேலப்பர் விதியை வேலாகக்கொண்டு சுகுணுவின் வாழ்விலே வீசு கிருர். எய்தவர் மேலேயே பாய்கிறது அந்த விசித்திர வேல் விதி. நீதிமன்றத்திலேகூட நிறுத்துகிறது நமது மதியை. வெற்றி யாருக்கு? விதிக்கா ? மதிக்கா? - : படித்துப் பாருங்கள். தமிழ் மன்றத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/4&oldid=853538" இலிருந்து மீள்விக்கப்பட்டது