பக்கம்:மதி (நாடகம்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 6 f குடி முழுகிவிட்டிருக்குமோ ? கிழவனேக் குமரிகள், காதலிப்பதில்லையாம். ஊறுகாய் பழையதுதான் அதை யாரும் புசிப்பதில்லேயாம். மகாபலிபுரம் பழைய கட்டிடந்தான். அதைக்கண்டு சிற்பக் கலேயைத் தெரிந்து கொள்வதில்லேயா ? கடல் தோன்றியது யாருக்குமே தெரியாது. அதில் யாருமே பிரயாணம் செய்வதில்லையா? ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ளப் பழைய நூல்கள் வேண்டும். பழைய விவகாரங்காேத் தெரிந்து கொள்ளப் பெரிய மனிதர்கள் தேவை. காத லுக்கு மாத்திரம் பல நாட்கள் அனுபவம் பெற்ற பெரிய மனிதர்கள் கூடாதாம். என்னுடா காலம் இது ! ரொம்ப முன்னேற்றமா இருக்குது. பிறகு யாரிடத் தில்தான் அந்த அருமையான கலயைக் கற்றுக்கொள் ளப் போகின் ருர்களாம் ? தெரிய தவர்கள் தெரிந்தவர் களிடம் கேட்டுப் பழகித் தெரிந்துகொள்வார்கள் என்று டெயர். இதுகள் என்னுடான்ன பொறந்தவுடனே போதனுசிரியர்களாய்ப் பேர்யிடுதுங்கோ. போகட்டும், நமக்கென்ன ? அதுவும் இன்னிக்கி ஒரு வாரம் ஆயி டிச்சி. பொதைச்ச எடத்திலே புல்லு மொளச்சிருக்கும் அந்தக் கொலேகாரப் பையலுங்களேயும் காணுேம். (வெளியே கோர்ட்டு அமீனு கதவைத் தட்டுகிருன்.) யாரது ? அமீனு : கோர்ட் ஜவான். வாய்யா உள்ளே-என்ன செய்தி ?” அமீனு : சம்மன் வந்திருக்கு. ஒகோ. அந்தக் கடன்காரப்பய கந்தசாமி பேர்லே தாவா போட்டோமே, அதுவா ? (என்று வாங்கிக் கையெழுத்துப் போட்டு . ஜப்? விட்டுச் சம்மணிப் படிக்க ஆரம்பிக்கின்றன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/63&oldid=853565" இலிருந்து மீள்விக்கப்பட்டது