பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மதுரைக் குமானுர் வறுமை பெருகிய நாட்டில் அறிவும் தொழிலும் வளம் பெறுதல் இல்லையென்பதைப் பண்டைத் தமிழர் நன்கறிந்திருந்தனர். நாட்டில் பசியும் பிணியுமின்றி வசி. யும் வளனும் பெருகவேண்டு மென்பது எல்லா மக்களும் பொதுவாக வேட்ட வேட்கை. அடிக்கடி நிகழும் போர்க ள்ாலும் ஆடவர் தொகைக் குறைவாலும் நாட்டின் விளை பொருள் எல்லா மக்கட்கும் கிடைப்பது அரிது. இதல்ை நாட்டில் இரவலர் உள ராதற்கியைபிருந்தது. அவ்விரவல ரைப் புரத்கல் புரவலருக்குக் கடனுமாயிற்று. பகுத் துண்டு பல்லுயிரோம்புதல் தலையாய அறம், இரவலர்க்கும் புரவலர்க்கும் உள்ள தொடர்பைப் பண்டைச் சோன்ருேர் உலகிற்கும் மழைக்குமுள்ள தொடர்பாகக் கருதினர். மழை, கடற்குச் சென்று. நீரை முகந்துவந்து கோடையால் வெதும்பும் உலகிற் பெய்து தணிப்புது கடன். அதுபோல, வினே வலியுடைய வேந்தரும் செல்வரும் வினைமேற்சென்று ப்ொருள் கொணர்ந்து இல்லோர்க் களித்தல் கடயிைற்று. இது குறித்தே கொடை வழங்கும் புரவலரைச் சான்ருேரனே வரும் மழைமுகிலோடு உவமித்துக் கூறியிருக்கின்றனர். மேலும், புலவர் முதலாயினர்க்கு வேண்டும்பொருளை அளித்து அவராற் பெறப்படும் புகழ்மேற்சென்ற வேட்கை ஒருபுறமிருக்க, நல்லறிஞர்பால் வறுமையில்லா திருக்கவேண்டி வேந்தரும் பிறரும் பொருளிட்டுதலைப் பெரு நோக்கமாகக்கொண்டே வினையைத் தம் உயிராக வெண்ணினர். ' வினையே ஆடவர்க்குயிர்' என்றும், புரக்கப்படுவோர் புன்கண்கூா, இரப்போர்க்கு ஈயா'மை தி தென்றும், செல்வமென்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கண் என்றும் சான்ருேர் பல முறையும் வற்புறுத்தியுள்ளனர். ஈதற்குரிய ஆண் மகன் இல்வழி, செல்வ மகளிர் இக் கொடைக் கடனைத் தவரு த ஆற்றினர்; இதனை மனேயோள் பாணரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணுெலி யாவமொடு கை துவாளே’ (புறம், க.க.ச) என்று சான்ருேர் கூறுவது காண்க.