பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மதுரைக குமானா யிரம் ஆண்டுக்ட்கு முற்பட்ட காலம் என்பது பொருத்த மாகும். இக்காலத்தே மேலே நாடுகளில் கிரேக்க நாடும், எகிப்து,நாடும் சிறப்புற்று விளங்கின. வடக்கே சிந்துவும் கங்கையும் பாயும் நாடும் அதனை யடுத்திருந்த நாடும் ஆரிய நாகரிகம் நன்கு பரவியிருந்த காலமும் அந்தக் காலங்தான். 'தமிழ் நாட்டில் ஆரிய நாகரிகம் படர்ந்து ஒரளவு இடம் பெற்றிருந்ததும் அக் காலமேதான். இதுபற்றியே சங்க காலம் தமிழக வரலாற்றில் முதலிடமாகக் கொள்ளப்படு கிறது. மேலும், தமிழ் நாட்டில் இதுபோது நிலவும் தமிழ் நூல்களில் மிகப் பழையனவாக உள்ள தமிழ் நூல்கள் இக்காலத்தனவே. - - ‘. . . வேற்று நாட்டு நாகரிகம் ஒரு பொருளாகக் கருதத். தக்க அளவு படராமல் தமிழ் நாகரிகமே சிறந்து கிற்க விளங்குவது இச்சங்க காலமேயாகும். நாட்டில் வாழ் பவர் தனித் தமிழர்; அவரை ஆள்பவரும் தமிழர்; ஆட்சி முறையும் தமிழ்; அவர்கள் கினைப்பதும் பேசுவதும் எல் : ழிழ் ஆதலால் அக்காலம் தமிழகத்துக்குச் சிறந்த ாருபொற்காலம் என்னலாம். இதனை யடுத்து வந்த லங்களில் தமிழ் நாகரிகம் வேற்று நாட்டு நாகரிகம் விர ன் தனித்தன்மை குன்றியது அரசியல், வாணிகம், சமுதாயம், சமயம், மொழி முதலிய வாழ்க்கைக் கூறு களும் தமிழ்ப் பண்பில் குறைந்தன. இடைக்காலத்தில், தமிழ் நாகரிகம் பெரிதும் தேய்ந்துவிட்டது; அரசியல், சமுதாயம், வாணிகம், சம யம், மொழி முதலிய பலவற்றிலும் வேற்ற நாட்டுக் கூறு கட்கே முதலிடம். தமிழகத்தில் தமிழர்க்கே முதலிடம் இல்லையாயிற்று. கலைத் துறையில் தமிழ்மொழி இரண்டா வது மொழியே. அரசியலில் அதற்கு இடமே கிடையாது; ஆங்கிலத்துக்கே முதலிடம். அம்முறையே சமயத்தில் ஆரியத்துக்கு முதலிடம். வாணிகத்தின் எல்லை நிலவுலகு முழுதும் பரந்துவிட்டது ; அதல்ை அதற்கும் ஆங்கிலமே மொழியாய்விட்டது. பொருள் வகையிலும் தமிழர் வறிய ராயினர் அதனுல் வடகாட்டவர்க்கும் பிறநாட்டவர்க்கும்