பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முடிவேந்தர் தொடர்பு 7i. கோக்கத் தன் குடியிலும், அயலூரை நோக்கத் தன்னுர்ரி லும், அயல்ாாடு நோக்கத் தன்னுட்டிலும் அன்பு மிகுத லால், தன்னுட்டவர் அனைவரையும் தன் உடன் பிறந்தா ராகவும், தன்னுட்டுத் தலைவர் தன் குடித் தலைவராகவும் தோன்றி அன்பு செய்தற்குரிய சாகின்றனர். தன் வாழ்க்கை முற்றும் தன்னுட்டு நலத்துக்கு ஆக்கமும் அரனுமாதல் வேண்டுமெனும் பேருள்ளம் பிறங்குகிறது. உள்ளத்துக்கேற்ப உரையும் செயலும் உளவாகின்றன. தன்னுட்டவருடைய ஆக்கமும் உயர்வும், தனக்குண் டாயினபோல உள்ளத்துக்கு எழுச்சியும் இன்பமும் கல் கும்; அவர்க்குண்டாகும் நல்குரவும் துன்பமும் தமக் குண்டாயினபோல நெஞ்சை வெதுப்பி உடல் துடிக்க உரைகுழறக் கண் பனிமல்க உறக்கமின்றி வாடும் உண்மை நிலையை யுண்டுபண்ணும். இவை யாவும் தன்னுடு நீங்கி வேறு சென்று உயிர்வாழ்வார் அனைவரும், உயிர் பெற்ற புவகை உணரும் உண்மையுணர்வுகளாகும். உயிரோடு கூடியுறையும் எவரும் இவற்றை யுணராமல் இருக்கமுடி யாது. ஒருகால் ஒருவர் உளராயின், அவர் நடைப்பின மாகவே கருதப்படுவர். - - இவ்வண்ணம் சிறந்து தோன்றும் தாய்நாட்டுணர்வு: குமரஞர் உள்ளத்தே நிறைந்து நின்றது. புலமைவளம் பெருக்ப் பெருக, கோட்ைடுக்குமுதலாகிய சோழங்ாட்டின் பால் பெருவேட்கை யுண்டாயிற்று. சோழவேந்தர்பால் போன்பு மிளிரத் தொடங்கிற்று. சோழநாட்டுக்குச் சென்று சோழவேந்தரையும் பிற செல்வர்களையும் கண்டு அவர் குணநலங்களைப் பாமாட்ட வேண்டுமெனும் நினைவு முறுகிவாக் தொடங்கிற்று. அங்கே வாழும் பாணர், கூத் தர் முதலாயினரும் என மக்களும் நல்வாழ்வு பெறுதற் குத் தம்மால் இயன்ற பணிபுரியவேண்டு மென்றெழுந்த ல்ேலுள்ளம் பின்னின்று பிடர்பிடித்து உந்திற்று. செங் தமிழ்ப் பாண்டி வேக்கன் சிறப்பும், மதுரை மூதூரின் மாண்பும், நல்லிசைச் சான்ருேரின் நற்சூழ்வும் குமா குரைச் செலவு மேற்கொள்ளவாறு களத்தன. கட்டிள