பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவேந்தர் தொடர்பு 89 குன்றுக்குச் செலுத்தினன். அதனைக் கண்ட குமரனர், இவ்விடையன் எதிர் பக்கத்துச் சிறுகாட்டுக்கு இவற் றைச் செலுத்துவானேன்? என வியந்து எண்ணமிட லானர். எண்ணமிட்டு முடிவதற்குள் இடையனுடைய ஆனிரைகள் மிக விரைவில் நெடுந்தொலைவு சென்று விட்டன. சிறிதுபோது கழிந்ததும் பசுந்தழை போர்த்த க்ற்குன்றின் முழைஞ்சொன்றிலிருந்து உருமுரறு பேர்ல்வ தொரு முழக்கம் கேட்டது. துணுக்குற்றுத் தெளிவு கொண்ட குமரனர் மடிவாய் இடையனது மனவுணர்வின் மாண்பு தெரிந்து பெரு வியப்பெய்தினர். அக் குன்று சூழ்ந்த வியன் புலம் புலி துஞ்சும் வியன் புல மென்று முன்னறிந்து அதனைக் குறுகுதற் கஞ்சித் தன் ஆனிரை களைக் கொண்டுய்த்த இடையன் செயல், மதுரைக் குமரனுர்க்கு மனத்தால் என்றும் மறக்கப்படாத தொன் முயிற்று. - - இவ் வகையில் நாட்கள். சில சென்றன. மேலும் சில சான்ருேர் சோமான் குட்டுவன் கோதையைக் காணக் குட்டநாட்டுக்குப் போந்தனர். சேரமான் அவர்கட்குப் பெருஞ் செல்வந் தந்து சிறப்பித்தான். அவர்கள் விடை. பெற்ற காலையில் மதுரைக் குமானுரும் தமக்கு விட்ை தருமாறு வேந்தர் பெருமானே வேண்டினர். சோமான் மழை முகிலும் நானுமாறு பெருஞ் செல்வங்களே அவருக்கு வழங்கிக் காலின் ஏழடிப் பின் சென்று வழி விட்டான். குமரனுர் ஏனைச் சான்ருேர் குழுவுடன் காடும் மலேயும் இடையிட்ட் வழிகளைக் கடந்து தம் நாடு நோக்கிச் செல்வாராயினர். சான்ருேர் குழாத்துக்குத் தலைவராய் வந்துகொண் டிருக்கையில், குமரனுர் வழியில் மிடியுற்று வருந்திவரும் பாணர் கூத்தர் புலவர் முதலிய பலரையும் கண்டு, தாம் பெற்ற பெருவளத்தை அவர்கட்கும் அறிவுறுத்திச் சேரமானுடைய ஊரும் பேரும் கொடையும் நடையும் பிறவும் எடுத்தோதி அச் சேரமான் குட்டுவன் கோதை பால் ஆற்றுப்படுத்தார். அவருட் சிலர், அச்சம் கின்று