பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மதுரைக் குமரனா தொழிலாயினும், ஆனிரையோம்புதலே பெருந்தொழிலாக அவர்களாற் கருதப்பட்டு வந்தது. குட்டநாடு செம்மண் பாங்கினதாகலின், அதற்கேற்ப ஆயர் சிவந்த ஆடை பணிவது மரபு. வெயிலால் உலர்ந்து காற்ருல் மோதுண் டெழும் செம்மண்ணின் துகள் படிதலால் ஆனிரை மேய்க்கும் ஆயர் மாசுபடிந்த உடையினராயிருந்தனர். குட்ட நாட்டில் தங்கியிருந்த மதுரைக் குமரனர் இடையாது வாழ்க்கையைக் கருத்துன்றி நோக்கினர். அவர்களது உள்ளத்தின் உயர்வும் ஆனிரை புரத்தலின் அமைதியும் குமரனர் புலமை புள்ளத்துக்கு இனிய பொருளாயின. தம்முடைய கோனுட்டிடையர் களவும் முல்ல்ையும் விரவிய கண்ணியணிந்திருந்ததைக் கண்டு பயின்றவராதலால், அவருக்குக் குட்ட நாட்டிடையர் அணிந்திருந்த கண்ணி வியப்பை விளைவித்தது. குட்ட நாட்டவர் பச்சிலையால் அழகுறத் தொடுக்கப்பட்ட உவலைக் கண்ணி யணிந்திருந்தனர். காட்டிடையே காற்ருல் எழும் செம்மண் மாசு தன்பால் படித்தாலும், பாசிலேக் கண்ணியின் பசுமை குன்ரு:தெனக்கருதி ஆயர் பசுங் தழைய்ைத் தம் கண்ணிக்குப் பயன் கொண்ட்து, அவ். விடையாது இயற்கை யறிவின் ஒட்பத்தைப் புலவர் அறியக் காட்டிற் று. ஒருகால் இடையைெருவன் தன்னுடைய ஆனிரை களே மேய்க்கக் காட்டிற் செலுத்திக்கொண்டு செல்வதை மதுரைக் குமானுர் கண்டு அவன் செயலில் தமது கருத் தைப் போக்கி கின்ருர், எதிரே முழைஞ்சுகள் நிறைந்த கற்குன்ருென்று பசுந்தழை போர்த்து அழகு திகழ நின்றது. அதற்கு நேரெதிரே சேய்மையில் சிறுகாடு சூழ்ந்த குன்ருென்று நின்றது. ஆங்கே இருந்த தழை மரங்கள் அத்துணை வளமாக இல்லே. ஆயினும் பசுங்தழை போர்த்துப் பார்வைக் கினிமை வழங்கிய கற்குன்று நோக்கிச் செல்லும் ஆனிரைகளே இடையன் தன் மடித்த வாயால் விளையொலி (யெழுப்பி மடக்கி, எதிர் பக்கத்தே சேணிற் புல்லிதாய்த் தோன் ம் சிறு காட்டுக்