உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இவர்களுக்கு உரியது. ஏற்றம் வாயிலாக மட்டுமே கிணற்று நீரை எடுக்கும் பழக்கம் மதுரை மாவட்டத்தில் தொன்றுதொட்டு இருந்தது. தெலுங்கு பேசும் மக்கள் தாம் கபிலை போட்டுத் தண்ணீர் இறைக்கும் முறையை இங்குப் பரப்பினர். கபிலையின் தோலைத் தைப்பதற்காகச் சக்கிலியரை வரவழைத்தனர். தெலுங்கு பேசுவோரில் 'குலாலர்' என்னும் இனத்தவரும் குறிப்பிடத்தக்கவர்கள். பண்ணைக்காடு, பெரியகுளம், ஐயம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள தெலுங்குச் செட்டியார்கள் மலைத்தோட்டங் களில் பயிரிடுவதிலும், துணிவியாபாரத்திலும் புகழ் பெற்றுள்ளனர். பயிர்த்தொழிலும், பருத்திப்பஞ்சு வியாபாரத்திலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் ரெட்டியார்கள் ஏற்றம் பெற்று உள்ளனர்.ரெட்டியாப்பட்டி, ரெட்டிபாளையம் என்னும் ஊர்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. கவரிநாயக்கர் என்னும் என்னும் இனத்தவர் பெரியகுளம் வட கரையில் உள்ளனர். இவர்கள் நீதிமன்றங்களில் அமீனா, டபேதார் போன்ற பதவிகளை வகிக்கின்றனர். நாயக்கர் நாயக்கமாரைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் மதுரை மாவட்டத்தைப் புரிந்துகொள்ள இயலாது. வரலாற்றைச் சிறிது கூறுவோம். எனவே திண்டுக்கல், மதுரை என்னும் இரு சீமைகளாக இன்றைய மதுரை மாவட்டம் 18-ஆம் நூற்றாண்டில் இருந்தது. மைசூரின் பகுதியாக இருந்த திண்டுக்கல் சீமையை 1790-இல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். அப்போது இந்தஇரு சீமைகளிலும் பல பாளையங் கள் இருந்தன. அவையாவன: