உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவுண்டர்கள் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியான கொங்குநாட்டுப் பழனி, ஒட்டன்சத்திரம் வட்டங்களில் உழைப்புக்கு இலக்கியமாக விளங்கும் வேளாண்மைத் தொழிலில் வல்ல வல்ல கவுண்டர்கள் உள்ளனர். இவர்களுடைய கொள்வினை கொடுப்பினை மற்றும் ஏனைய தொடர்புகள் கோவை மாவட்டத்துடன் அமைந்துள்ளன. தெலுங்கு பேசும் மக்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறிய கம்மவர், ரெட்டியார், கம்பளத்தார், தெலுங்குச் செட்டியார், தெலுங்குப்பிராமணர், மற்றும் பொற்கொல்லர், சக்கிலியர் ஆகியோர் பல நூறாயிரம் பேர் ஆவர். இவர்கள் வேறு மாவட்டங் களைவிட, மதுரை மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புறத்திலுமே மிகுதியாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஆந்திரத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்ததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. விஜயநகரப் பேரரசுடன் இணைந்த நாயக்க மன்னர்கள் மதுரையில் ஆட்சி செய்ததுதான் முக்கியமான காரணம். ஆந்திர நாட்டில் அரசியல் அல்லோல கல்லோலப்பட்டபோது, வேளாண்மைத் தொழில் பாதிக்கப் பட்டுப் பஞ்சம் ஏற்பட்டதால் எங்கேயாவது ஓடிப்போய்ப் பிழைப்போம் என்று தெற்குநோக்கி வந்தவர்களும் உண்டு. முஸ்லிம் ஆட்சி ஏற்பட்டதால் அஞ்சி ஆந்திர நாட்டை விட்டு, பல நூறாயிரம் பேராக வெளியேறியவரும் உண்டு. இவர்களுக்கு இந்நாளில் தெலுங்கு மொழியை எழுதவோ படிக்கவோ தெரியாது. எனவே தெலுங்கு இவர்களுடைய தாய் மொழி என்று சொல்லுவது பொருந்தாது. யங்கும் இவர்களுக்குத் தெரிந்த தெலுங்கு, மேலை நாட்டு முறையில் உணவு விடுதிகளில் உணவு படைக்கும் பட்லர் சிலருக்குத் தெரிந்த ஆங்கில மொழி அறிவு அளவினதே. இவர் களில் பலர் சிறந்த தமிழ்ப்புலவர்களாக உள்ளனர். மதுரை மாவட்டம் பெரும்பகுதி காடாக இருந்தது. தெலுங்கு பேசும் மக்கள் குடியேறிய பிறகே காடுவெட்டி, பயிர் செய்யப்பட்டது. பயிர்த்தொழிலைத் திருத்தியமைத்த பெருமை