உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இத்தகு சிறப்புகளுடையது மீனாட்சியம்மன் கோயில். இந்த ஆலயம் நம்மையறியாமலே நமக்கு ஒரு பெருமித உணர்வை ஊட்டுகிறது. இம்மாவட்டத்தின் எண்ணற்ற பெருமைகளையும் ஏனைத் தனித்தன்மைகளையும் இம் முதற் கட்டுரையில் சுட்டுவோம். இயற்கை அமைப்பு ம் குறிஞ்சி, முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என்று நிலத்தைப் பழந்தமிழர் ஐவகைப்படுத்தினர். நெய்தலும் பாலையும் இம் மாவட்டத்தில் கிடையாது. உள்நாட்டிற்குள் இருப்பதால் மதுரை மாவட்டத்திற்குக் கடற்கரை, காயல், தீவு, தருவை என்பன இல்லை. தேரி முதலிய மணற்பாங்கான பகுதிகளையும் மணல்மேடுகளையும் பாலைவனங்களையும் இம்மாவட்டத்தில் காண இயலாது. இங்கே இருக்கும் மணல் மேடெல்லாம் வைகை கொண்டுவந்து சேர்த்திருக்கும் மணற்பரப்பே. அதுவுங்கூட அதன் வெள்ளத்தோடு வெள்ளமாய் இராமநாதபுர மாவட்டத் திற்குச் சென்றுவிடுகின்றது. குறிஞ்சி இம்மாவட்டம் மலைத்தொடர்கள் பலவற்றை உடையது. குறிஞ்சி வளத்துக்குச் சான்றாகத் தமிழ்நாட்டில் கொங்குநாடு விளங்கிய போதிலும் மதுரை மாவட்டத்திலும் கோக்கோ, ஏலக்காய், வாழைப்பழம் முதலியன விளைந்து வருவாய் வளம் நிறைந்ததும் சமயத் தொடர்பாலும் கலைச்செல்வத்தாலும் வரலாற்றுப் புகழ் நிறைந்ததுமான மலைகளும் இவற்றைச் சார்ந்த செல்வம் செழிக்கும் காடுகளும் உள்ளன. உலகம் முழுவதும் அடர்ந்த மரங்களாக இருந்த காலத்தில் காலத்தில் இந்தக் இந்தக் காடுகளில் மனிதனும் விலங்கோடு விலங்காக அலைந்து திரிந்தான் என்பதற்கு அடையாளமாக மதுரை மாவட்டத்தில் மலைகளும் மலைப்பகுதி களும் ஊர்களும் பெயர்பெற்றுள்ளன. யானை மலைக் பசுமலை (காளைமலை என்றும் கூறுவர்) கோவை மாவட்டம் பொள்ளாச்சிப் பகுதியில் இருப்பது ஆனைமலை; மதுரை மாவட்டத்தில் இருப்பது யானை மலை.