உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகமலை சிம்மக்கல்* கரடிப்பட்டி துவரிமான் சிலைமான் எலியார்பத்தி திருப்பரங்குன்றம் ஒன்றியம் ஆனையூர் (மதுரை மேற்கு ஒன்றியம்) புலிப்பட்டி (கொட்டாம்பட்டி ஒன்றியம்) பன்றிக்குண்டு கரடிக்கல் திண்டுக்கல் திருமங்கலம் ஒன்றியம் முதிரைமலை என வழங்கும் பகுதியின் பழைய பெயர் குதிரைமலை என்பர். யானைமலையின் தொடர்ச்சியாகப் பல சிறு மலைகள் உண்டு. அவற்றில் ஒன்று மாங்குளம் என்னும் ஊரைச் சேர்ந்த கழுகுமலை. செங்குத்தான மலைச்சரிவில் மிகப் பழமையானதொரு தமிழ்க் கல்வெட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் கல்வெட்டுச் செல்வமாகப் பேணவேண்டிய பகுதி இது. அழகர்கோயில் என்னும் ஊரை அடிவாரமாகக் கொண்ட அழகர்மலை மதுரை மாவட்டத்தின் புகழ்மிக்க குறிஞ்சிப் பகுதி களில் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலையில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதியில் பெரும்பிரிவு பழனிமலை என்பதாகும். இது மேல் பழனிமலை, கீழ்ப் பழனிமலை என இரு இரு பிரிவுகளை உடையது. மேல் பழனிமலை 6,000 அடி முதல் 8,000 அடிவரை உளது. இதன் உயர்ந்தசிகரம் வெம்பாடிச்சோலை (ஷோலா) இளமரக்காடு மலை என்னும் பெயர்பெற்றது. 8,218 அடி உயரமானது, கேரள எல்லையில் உள்ளது. இம்மலையின் உயரம் 8,221 அடி என்றும் சொல்லுவர். இதைச் சார்ந்தது கோடைக்கானல். எண்ணற்ற இயற்கைக் காட்சிகளும் பூத்துக் குலுங்கும் புதுமலர்களும் இது மதுரை நகரில் ஓர் இடத்தின் பெயர்; இவ்வாறே யானைக்கல் என்னும் பெயருடைய பகுதியும் உளது.